12416 – சிந்தனை (தொகுதி XV, இதழ் 3).

செல்லையா கிருஷ்ணராசா (இதழாசிரியர்), எஸ்.சந்திரசேகரம் (நிர்வாக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: கலைப்பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, நவம்பர் 2015. (யாழ்ப்பாணம்: கரிகணன் தனியார் நிறுவனம், இல. 424, காங்கேசன்துறை வீதி).

v, 117 பக்கம், விலை: ஆண்டு சந்தா ரூபா 1500., அளவு: 24.5×19 சமீ.,ISSN: 2478-1061.

இவ்விதழில் புறவயநிலையில் இலங்கைத் திருச்சபை வரலாற்றில் விளக்கம் அளிப்பதில் எதிர்கொள்ளப்படுகின்ற சவால்கள்: குறிப்பாக போர்த்துக்கேயர் கால ஆவணங்களை மையமாகக் கொண்டது (வணபிதா ஞா.பிலேந்திரன்), உள்நாட்டு யுத்தத்திற்குப் பின்னர் இலங்கையில் நல்லிணக்கத்தினை கட்டி யெழுப்புதல்: சவால்களும் சந்தர்ப்பங்களும் (த.கிருஷ்ணமோகன்), யுத்தத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கையின் வடமாகாண பாடசாலை மாணவர்க்குரிய பொதுப்பரீட்சைகளின் பெறுபேறுகளிலான தளம்பல்கள்: அவற்றுக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் (ஆ.நித்திலவர்ணன்), யாழ்ப்பாணத்தில் பழப்பாகு தயாரிப்புக்களில் தரநிர்ணய அளவீடுகள்: ஓர் ஆய்வு (பத்மாசனி குலராஜசிங்கம், அருளானந்தம் கிறிஸ்ரி தவரஞ்சித்), வாழ்வாதாரச் சொத்துக்களை படமாக்கலும் வறுமையின் பரிமாணமும்: ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவை சிறப்பாகக் கொண்டது (சுபாஜினி உதயராஜா, கருணாகரன் சுதாகர்), குடியேற்றங்களால் உருவான தொன்மங்கள்-நல்லூர் அரசமரபின் உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த குடியேற்றங்கள் தந்த தொன்மங்கள் பற்றிய ஆய்வு (செல்லையா கிருஷ்ணராசா), யாழ்ப்பாணப் பொருளாதாரக் கட்டமைப்பு (1930-1953): ஈழகேசரிப் பத்திரிகையினை அடிப்படையாகக் கொண்டது (கா.அருந்தவராஜா), யாழ்ப்பாண மாவட்டத்தில் காலநிலை மாற்றமும் தணிப்பு நடவடிக்கைகளும் (நா.பிரதீபராஜா) ஆகிய ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61369).

ஏனைய பதிவுகள்