12425 – நித்திலம்: தமிழ் மொழித்தினவிழா மலர் 1998

எஸ்.எதிர்மன்னசிங்கம் (தொகுப் பாசிரியர்). திருக்கோணமலை: வடக்கு கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (திருக்கோணமலை: ஸ்ரீ கணேச அச்சகம்).

(14), 28 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×19 சமீ.

திருக்கோணமலை வடக்கு-கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் வருடாந்தம் நடத்தும் தமிழ் மொழித்தின விழாவினையொட்டி வெளியிடப்படும் சிறப்பு மலர் இதுவாகும். அப்பிரதேசத்தின் மாணவர்கள், ஆசிரியர் மற்றும் கல்வியியலாளர்களின் பல்துறை ஆய்வுகள், ஆக்கங்கள் என்பன பல்வேறு படைப்பாக்கங்களின் வாயிலாக இதில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஆசியுரைகளுடன் வெளிவரும் இம்மலரில், புதிய கல்விச் சீர்திருத்தங்கள் பாட ஏற்பாட்டு மாற்றங்கள் (சோ.சந்திரசேகரன்), தமிழன்னையிடம் ஒன்று கேட்பேன்- கவிதை (தவநேசன் பிரதாபன்), தமிழ் ஆளுமை: மொழி ஆளுகையின் தன்மையே ஒருவனின் ஆளுமை விருத்தியைத் தீர்மானிக்கிறது (எம்.எஸ்.ஸ்ரீதயாளன்), மாதா,பிதா,குரு,தெய்வம் (கே.ரெனிக்கா குரூஸ்), வெற்றிப் பாதை (பூ.சௌதாயினி), வெண் புறாவே விரைந்து வா-கவிதை (டி.பி.சந்திரலால்), மாலை நேரத்தில் கடற்கரைக் காட்சி (நீரஜா சிவகணேசன்), ஏற்றிய தீபம் – சிறுகதை (ஏ.கே. செபானா), பாரம்பரியக் கலைகள் மறக்கப்படக் கூடாதவை (ச.இரமணீகரன்), இனியொரு விதிசெய்வோம் – கவிதை (கந்தசாமி மோகனதாசன்) ஆகிய ஆக்கங்களுடனும், நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பரிசுபெற்ற போட்டியாளர்களின் பெயர்ப்பட்டியல், வடக்கு கிழக்கு மாகாணத் தமிழ்மொழித்தின விழாக்குழுச் செயலாளரின் செய்தியும் நன்றி நவிலலும் ஆகிய அம்சங்களும் இறுதியில் இடம்பெற்றுள்ளன. இம்மலர் வெளியீட்டுக் குழுவில் எஸ்.மகாலிங்கம், எஸ். எதிர்மன்னசிங்கம், எஸ்.நவரட்ணம், எஸ்.மகேஸ், எஸ்.இரமணீகரன், எஸ். பவளகாந்தன், எம்.பற்குணம், பீ.தண்டாயுதபாணி, என்.ஸ்ரீதேவி என ஒன்பது பேர் பணியாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34534. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 004034).

ஏனைய பதிவுகள்

11016 இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம்: திரு- திருமதி இராசையா-இராசம்மா ஞாபகார்த்த தகவல் தொழில்நுட்ப மையம் கட்டட திறப்புவிழா சிறப்பு மலர் 24-08-2013.

மலர் வெளியீட்டுக் குழு. இணுவில்: சொ.ஹரிசங்கர், தலைவர், இணுவில் பொது நூலகம் சனசமூக நிலையம், 1வது பதிப்பு, ஒகஸ்ட் 2013. (கோண்டாவில்: அன்ரா பதிப்பகம், உப்புமடம் சந்தி). 48 பக்கம், புகைப்படத் தகடுகள், விலை:

16325 டெங்கு காய்ச்சல்: டெங்கு காய்ச்சல் மற்றும் டெங்கு நோய் காவியும் அதனைக் கட்டுப்படுத்தும் முறைகளும்.

ந.சுகந்தன். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை, 2வது பதிப்பு, 2022, 1வது பதிப்பு, 2020. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).