சிவகாமி அம்பலவாணர் (இதழாசிரியர்). கொழும்பு: பழைய மாணவிகள் சங்கம், யாழ். இந்து மகளிர் கல்லூரி- கொழும்புக் கிளை, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).
(2), 94 பக்கம், புகைப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.
யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்க, கொழும்புக்கிளை ஆண்டுதோறும் வெளியிடும் பல்சுவை இதழ் இதுவாகும். இதில் தலைவர் செய்தி, பத்துப் பருவங்கள், சிரித்துக்கொண்டே இருப்பேன், சத்தியம் காத்த சந்திரமதி, கீதையில் ஒரு துளி, சங்க கீதம், நாலு கோடிப் பாடல், வாடக் கூடாது கல்யாணமாலை, மாதர் கட்டிய சேலை, என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள், லலிதா, பெண்ணின் பெருமை, யாழ். இந்து மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் சங்கத்தின் மூன்றாம் ஆண்டறிக்கை 1996, எளிமையாக வீட்டில் செய்யும் சிற்றுண்டி வகைகள் சில, கைமருந்துகள், சிறுவர் விஞ்ஞானம், உலகின் விந்தைகள் சில உங்களுக்காக, தங்கம் பற்றிய தகவல்கள், யாழ் நாதம்-2 வெளியீட்டின் போது அளித்த மெல்லிசை (விமர்சனம்) ஆகிய தமிழ் ஆக்கங்களும் ஆறு ஆங்கில ஆக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. கொழும்புக் கிளையின் தலைவியாக சற்சொரூபவதி நாதன் பணியாற்றுகின்றார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39653).