12435 – வித்தியோதயம்: 1975-1976.

பொ.இரத்தினசிங்கம், நி.சரவணபவான் (இணை இதழாசிரியர்கள்). நுகேகொடை: தமிழ் மன்றம், வித்தியோதய வளாகம், இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 1976. (கொழும்பு 12: குமரன் அச்சகம், 201, டாம் வீதி).

xix, 214 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×18 சமீ

இவ்விதழில் பொருளியல், முகாமையியல், கணக்கியல், புவியியல், சட்டம், சிறுகதைகள் ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் வகுக்கப்பட்டுள்ளன. பொருளியல் பிரிவில் வெளிநாட்டு உதவியின் தத்துவம் (வி.நித்தியானந்தம்), இலங்கையில் பணவீக்க நெருக்கடிகள் (ஆர்.ஜெயரத்தினராசா), தேயிலையும் இலங்கையின் பொருளாதாரமும் (க.சுந்தரலிங்கம்), இலங்கையில் வங்கித் தொழில்முறை (இ.பாலசிங்கம்), இலங்கையிற் கைத்தொழில் வளர்ச்சி (பொ.சங்கரப்பிள்ளை), ஆயிரம் ரூபா சேமிப்பும் அதன் பொருளாதார விளைவுகளும் (க.மென்டிஸ் அப்பு), பேரினப் பொருளியலில் பெருக்கெண்ணின் தொழிற்பாடு (கே.எஸ். நடராசா), மத்திய வங்கியின் கடன் கட்டுப்பாட்டு முறைகள் (வ.அன்ரனி) ஆகிய ஆக்கங்களும், முகாமையியல் பிரிவில் இலங்கையில் மூலதன முதலீட்டுத் தீர்மானங்கள் (ஹேமா விஜயவர்த்தனா), நிகழ்ச்சித் திட்ட, செயல்திட்ட வரவுசெலவுத் திட்டமிடலுக்கோர் அறிமுகம் (பொ.சிவசுப்பிரமணியம்), இலங்கையின் பொருளாதார விருத்தியில் திட்டமிடுதலும் முகாமையின் பங்கும் (சி.சிறீஸ்கந்தராசா), முகாமை விஞ்ஞானம் (எஸ்.எம்.கிறிஸ்ரி) ஆகிய ஆக்கங்களும், கணக்கியல் பிரிவில் கணக்கியலில் புதிய திருப்பம் (சு.சிவகுரு), கம்பனிக் கணக்குகளில் ஏற்பாடுகளும் ஒதக்கீடுகளும் உபயோகிக்கப்படவேண்டிய முறை (ச.தம்பிப்பிள்ளை), இலங்கையில் வரியமைப்பு முறையும் 1976 வரவு செலவுத் திட்டமும் (ந.மனோரஞ்சன்), கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் (எஸ்.இராசதுரை), நிர்மாண வேலைகளுக்கு நிதித் திட்டமிடுதலும் கிரயக் கட்டுப்பாடும் (டி. ரி.இராஜரட்ணம்), கிரயக் கணக்குகளையும் நிதிக் கணக்குகளையும் இணங்கச் செய்தல் (டி.ரி.இராஜரட்ணம்), கணக்கியல் விகித ஆய்வினுக்கோர் அறிமுகம் (எஸ்.சிதம்பரநாதன்) ஆகிய ஆக்கங்களும், புவியியல் பிரிவில் மூலவளக் கோட்பாடும் மூலவளப் பயன்பாடும் (மா.செ.மூக்கையா) என்ற கட்டுரையும், சட்டப் பிரிவில் பங்குடைமைச் சட்டம் (செ.தங்கராஜா) என்ற கட்டுரையும், சிறுகதைப் பிரிவில் ‘இதயங்கள் வெல்லப்படுகின்றன” (சண். அருள்சோதி), ‘மேலும் ஒரு திரை கிழிகின்றது” (எ.ஜே.மலன்கொவ்) ஆகிய இரு சிறுகதைகளும் இடம் பெறுகின்றன. இறுதிப் பிரிவாக தமிழ் மன்றச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 11236).

ஏனைய பதிவுகள்

Gala Casinon lisävaatimukset, kommentoi Hanki 2024

Blogit Erilaiset online-kasinon 100 prosentin ilmaiskierrokset | vieraile tällä sivustolla Parempi rahapelien perustaminen Rekisteröi Kannustimet Olla Voi saada Pienin talletus Uudet vieraile tällä sivustolla maksukertoimet