12441 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 1992

. மலர்க் குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், 1வது பதிப்பு, ஜுலை 1992. (கொழும்பு 11: மெய்கண்டான் அச்சகம், 161, செட்டியார் தெரு).

(50) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×22 சமீ.

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 1992 கண்டி, புனித அந்தோனியார் கல்லூரி மண்டபத்தில் 19.7.1992 அன்று பி.ப. 2.45 முதல் மாலை 8.30 வரை, கல்வி இராஜாங்க அமைச்சர் இராசமனோகரி புலேந்திரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. குழுக்கள், உபகுழுக்கள் மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், ஆசிச் செய்திகள், போட்டிகளில் பரிசுபெற்ற மாணவர்களின் விபரம், நிகழ்ச்சி நிரல் போன்றவற்றை உள்ளடக்கியதாக இச்சிறப்பு மலர் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28314).

ஏனைய பதிவுகள்

17091 எறிக் எறிக்சனின் உளசமூகக் கொள்கை (ஆளுமைக் கொள்கைகள்-4).

இராசேந்திரம் ஸ்ரலின். பருத்தித்துறை: ஜீவநதி, கலையகம், சாமணந்தறை ஆலடிப்பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, பங்குனி 2024. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி). 24 பக்கம், விலை: ரூபா 200., அளவு: