12448 – அகில இலங்கை தமிழ்மொழித் தினம் 2001.

எஸ்.தில்லைநடராஜா (மலர்க் குழு சார்பாக). கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, உயர் கல்வி அமைச்சு, இணை வெளியீடு, கொழும்பு: கல்வித் திணைக்களம், மேல் மாகாணம், இசுருபாயா, பத்தரமுல்ல, 1வது பதிப்பு, 2001. (கொழும்பு 13: யூ.கே. பிரின்டர்ஸ், 98 A, விவேகானந்தா மேடு).

(4), 56 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×22 சம

கல்வி உயர்கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவு மேல்மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடாத்தும் அகில இலங்கைத் தமிழ் மொழித் தின விழா 2001இல் நடைபெற்றவேளையில் வெளியிடப்பெற்ற சிறப்பு மலர் இது. அழகியற் கல்வியில் நடனத்தின் முக்கியத்துவம் (லீலாம்பிகை செல்வராஜா), கலைத்திட்டமும் மொழி கற்பித்தலும் (தை.தனராஜ்), தமிழ்த் தின விழா சில சிந்தனைகள் (செ.யோகநாதன்), மெல்லத் தமிழினிச் சாகும் (ரு.டு.அலியார்), தமிழர் மரபில் புலக்காட்சியும் ஆடல் அழகியலும் (சபா.ஜெயராசா), இலக்கியம் கற்பித்தல்: ஏன் எதற்கு (கா.சிவத்தம்பி) ஆகிய சிறப்புக் கட்டுரைகள் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41194).

ஏனைய பதிவுகள்

Card games

Articles Web based poker Tells Faqs What are Intended Chance? Strategies for Designed Odds Such A seasoned Professional Step 3: Be the cause of Our

12964 – இலங்கையின் பண்டை நிலவாட்சியும் அரசிறையும்.

H.W.கொட்றிங்ரன் (ஆங்கில மூலம்), திருமதி வு.சிவரத்தினம் (தமிழாக்கம்). கொழும்பு 7: வெளியீட்டுப் பிரிவு, கல்வி வெளியீட்டுத் திணைக்களம், சேர் ஏர்ணஸ்ட் த சில்வா மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1969. (கொழும்பு: இலங்கை அரசாங்க

13034 மனிதரில் எத்தனை நிறங்கள்.

வைரமுத்து சிவராஜா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், Am Windhovel 18a, 47249 Duisburg47249, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக விபரம் தரப்படவில்லை).165 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.