12449 – அகில இலங்கைத் தமிழ்த் தின விழா: மட்டக்களப்பு, 1970.

மலர்க் குழு. மட்டக்களப்பு: கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1970. (மட்டக்களப்பு: சென். செபஸ்தியன் அச்சகம், 65, லேடி மனிங் டிரைவ்).

28 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×19 சமீ.

மட்டுநகர் மாநகர மண்டபத்தில் 1970 ஆகஸ்ட் 13,14,15ஆம் திகதிகளில் இடம்பெற்ற அகில இலங்கைத் தமிழ்த்தின விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு கல்வித் திணைக்களம் வெளியிட்ட சிறப்பு மலர். ஆசியுரைகள், வாழ்த்துரைகள், நிகழ்ச்சி நிரல், பங்குபற்றும் பாடசாலைகளின் விபரம், விழா அமைப்புக் குழு, தமிழ்த்தின விழா நடுவர் குழு பற்றிய தகவல் ஆகியவற்றுடன், தமிழ்த்தின விழா (முகம்மது சமீம்), தமிழ்த்தின விழாவின் முக்கியத்துவம் (பொன். சின்னத்துரை), தமிழ்த்தின விழா நோக்கமும் பயனும் (க.கைலாசபதி) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 9614).

ஏனைய பதிவுகள்

16498 எனக்குப் பறவை நிழல்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 600083: சந்தியா பதிப்பகம், புதிய எண் 77, 53 ஆவது தெரு, 9ஆவது அவென்யூ, அசோக் நகர், 1வது பதிப்பு, 2018. (சென்னை