தி.சசீதரன் (மலர் ஆசிரியர்). யாழ்ப்பாணம்: இணுவில் இந்துக் கல்லூரி, இணுவில், 1வது பதிப்பு, மே 2015. (சுன்னாகம்: மகிந்தன் கணனி அச்சகம்).
xxxix,182 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
இணுவில் இந்துக் கல்லூரி தனது 150ஆவது ஆண்டு விழாவைச் சிறப்பாக 24.5.2015 இல் கொண்டாடியது. அதன் நினைவாக கல்லூரிச் சஞ்சிகையான ‘இணுவில் இந்து” இச்சிறப்பு மலரை வெளியிட்டுள்ளது. மலர்க்குழுவில், ச. கவிதா, ந.சுகுமாரன், பி.கவியரசி, ச.ஜெகன் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். கல்லூரியின் வரலாற்றை விளக்கும் ஆவணங்களும் கட்டுரைகளும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61069).