பாடசாலை அபிவிருத்திச் சபை. உரும்பராய்: பாடசாலை அபிவிருத்திச் சபை, உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலயம், 1வது பதிப்பு, 1992. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
(30), 91 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.
யாழ். உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையின் வரலாறு தொடர்பான பல்வேறு அறிக்கைகள், கட்டுரைகள் மற்றும் கவிஞர்கள் இ.முருகையன், சு. செல்லத்துரை, க.இ. சரவணமுத்து, திருமதி ம.சிவசிதம்பரலிங்கம், நம. சிவப்பிரகாசம், செ.ஐயாத்துரை, க. ஆனந்தராசா, சோ.பத்மநாதன், இ.நவரத்தினக் குருக்கள், ம.பார்வதிநாதசிவம், பெரியதம்பிப்பிள்ளை தருமலிங்கம் ஆகியோரின் வாழ்த்துக் கவிதைகள் என்பவற்றுடன் தொடங்கும் இம்மலர், பேராசிரியர் வ. ஆறுமுகம் (கல்வி அன்றும் – இன்றும்), கு. சோமசுந்தரம் (நாவலர் கல்விச் சிந்தனையும் சைவத் தமிழ்க் கல்வி மறுமலர்ச்சியும்), பண்டிதமணி சி. கணபதிப்பிள்ளை (ஆச்சிரமக் கல்வி), சி. தில்லைநாதன் (இலங்கைப் பல்கலைக் கழக வளர்ச்சிக்குத் தமிழர் பங்களிப்பு), அ.சண்முகதாஸ் (தமிழ் மொழி கற்பித்தல் தொடர்பான சில சிக்கல்கள்), ஆர்.எஸ்.நடராசா (ஆசிரியரின் சிந்ததனைக்கும் செயற்பாட்டுக்கும்), க.சொக்கலிங்கம் (பாரத இளவல்கள் மூவர்), செல்லப்பா நடராசா (மாணவர்களும் வாசிப்பும்), கா.இராஜகோபால் (சைவத் தமிழிற் கல்வி வளர்ச்சி), ப. கோபாலகிருஷ்ணன் (சைவ சமய மரபுச் சிந்தனைகள்), அ. பஞ்சாட்சரம் (உரும்பிராய் பற்றிய ஒரு நோக்கு) ஆகியோரின் கட்டுரைகளை உள்ளடக்குகின்றது. மேலும் பாடசாலை மாணவ மணிகளின் படைப்பாக்கங்களும் இம்மலரை அலங்கரிக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13508).