12459 – கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர்.

12459 கரவை விக்னேஸ்வராக் கல்லூரி: பவளவிழா 1917-1992 சிறப்பு மலர். ஆ.சுப்பிரமணியம் (மலராசிரியர்). யாழ்ப்பாணம்: பழைய மாணவர் சங்கம், கரவை விக்னேஸ்வராக் கல்லூரி, கரவெட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1994. (யாழ்ப்பாணம்: தாசன் அச்சகம், மகேந்திரா வீதி).

(30), 76 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், அட்டவணைகள், வரைபடங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 26×21.5 சமீ.

16.01.1995 அன்று நிறைவடைந்த மூன்றுநாள் பவளவிழா நிகழ்வின்போது வெளியிடப்பெற்ற சிறப்பிதழ் இது. வாழ்த்துக்கள்,ஆசிச் செய்திகளுடன் விக்னேஸ்வராக் கல்லூரியின் வரலாறு (மலர் வெளியீட்டுக் குழு), வடமராட்சி தென்மேற்கின் புவியியல் பின்னணி-விக்னேஸ்வராவின் அமைப்பு (கதிர்காமு பரஞ்சோதி), ஞான தினகரன் (கை.நமசிவாயக் குருக்கள்), வெள்ளிவிழா கண்ட ஆசிரியர்கள், விக்னேஸ்வராக் கல்லூரியும் அதன் கல்விப் பணியும் (முருகேசு சிவசங்கரம்), சமூகநீதி சமூக மேலசைவு ஆகியவற்றை கருத்திலே இருத்திய கல்லூரி (வி.செ.சுவாமிநாதன்), தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை (மு. சிவசிதம்பரம்), நாற்பதுகளில் விக்னேஸ்வரா (கே.சிதம்பரப்பிள்ளை), பிரம்மாவின் பிரம்மாக்கள் (தெணியான்), ஐம்பதுகளில் விக்னேஸ்வரா (ஜே.சீ.அம்பிகாவரன்), காலத்தால் தளராத தரிசனங்கள் கரவெட்டியின் பண்பாட்டு ஆளுமை (கா. சிவத்தம்பி), இரு கோணங்களில் -கவிதை (மனோன்மணி நடராசா), விளையாட்டுத்துறையும் விளையாட்டுகளும் (கே.எஸ்.சிதம்பரநாதன்), ‘சுயபாஷா” -நாடகம் (ஆட்டிஸ்ட் பாலா), விக்னேஸ்வராவில் ஆங்கிலக் கல்வி (ஏ.சின்னத்தம்பி), நினைவில் நிரம்பிவை (வ.செல்லையா), விடிவுக்கு வித்திட்ட விக்னேஸ்வராகவிதை (மன்னவன்), எண்பதுகளில் விக்னேஸ்வரா (அ.ம.ஜெபரத்தினம்)விக்னேஸ்வரா-கரவையின் கலைக்கோவில் -நினைவலைகளும் உணர்வலைகளும் (ஆ.சுப்பிரமணியம்), இலங்கையில் தமிழர் நிலை -மறுபதிப்பு (வி.மகேஸ்வரன்), ஆசிரியனின் பல்வகைத் தோற்றங்களும் செயற்பாடுகளும் (வ.ஆறுமுகம்), ஐந்தைம்மூ வாண்டாகும் அத்தியாயம் காணும் அருள்- கவிதை (திவ்யா தங்கன்) ஆகிய படைப்பாக்கங்களும் பவளவிழாப் போட்டியில் பரிசுபெற்ற மாணவர் படைப்பாக்கங்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39862. நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தின் சேர்க்கை இலக்கம் 034359).

ஏனைய பதிவுகள்

12419 – தமிழோவியம் 1945-2014.

செ.கேசவன், செ.விவேக், வி.ஆதர்ஷன் (இதழாசிரியர்கள்). கொழும்பு: தமிழ் இலக்கிய மன்றம், பரி.தோமாவின் கல்லூரி, 1வது பதிப்பு, 2014. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி). xxiv, 157 பக்கம், தகடுகள், புகைப்படங்கள்,

Totally free Slots On line

Articles Local casino Orgs Current 100 percent free Games How to choose A knowledgeable Real cash On the web Position Video game Boost your Stakes