12464 – கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக் கிளை பொன்விழா சிறப்புமலர் 1944-1994.

மலர்க் குழு. கொழும்பு: பழைய மாணவர் சங்கம், கொழும்புக் கிளை, கொக்குவில் இந்துக் கல்லூரி, 1வது பதிப்பு, 1994. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

xl , 180 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

அளவுக்கு அதிகமான விளம்பரப் பக்கங்களுடன் 5.3.1995 அன்று வெளிவந்துள்ள இப் பொன்விழாச் சிறப்பு மலரினுள் 72 ஆக்கங்கள் உள்ளன. பெரும்பாலானவை வாழ்த்துரைகளாகவும், அவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியில் அமைந்ததாகவும் உள்ளன. இதற்குள் புதையுண்டுபோன 13 தமிழ் மொழி மூலமான பதிவுகளையே காணமுடிகின்றது. அவற்றில் கல்லூரி கீதம், தமிழகக் கவிஞர் வைரமுத்து, உப அதிபராகவிருந்த திரு. அ.பஞ்சலிங்கம், வீரமணிஐயர், சுபத்திரா இராமநாதன், கனடா செ.வேலாயுதபிள்ளை ஆகியோரின் வாழ்த்துக்கள் போக எஞ்சிய பின்வரும் ஆக்கங்களையே இனம்காண முடிகின்றது. நிறுவனங் களின் வளர்ச்சியில் தலைமைத்துவத்தின் பங்கு (க.தேவராஜா), பயன்தரும் வாசிப்பு (வ.சிவராஜசிங்கம்), கல்வி மாதரசை வணங்கி வாழ்வோம் (வ. சிவராஜசிங்கம்), கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் கொழும்புக்கிளை (சி.முத்துக்குமாரசுவாமி), கணித மேதைகள் வரிசையில் இராமானுஜம் (எஸ்.ரவீந்திரன்), கோமா என்னும் கொடிய நிலை (பீ.மயூரன்), பள்ளித்தோழியே (சண்முகவதனி சண்முகநாதன்). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 34601).

ஏனைய பதிவுகள்

Slingo Starburst Slot

Content Omówienie Zasad Grania Na Slocie Starburst From the Position Tracker Casinos Element Starburst Pokie The real deal Currency Ideas on how to Enjoy And