12466 – கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி இருபதாம் ஆண்டு நிறைவையொட்டிய வெளியீடு 2001.

தனாளினி கதிர்காமநாதன்இ காயத்திரி இராஜகோபால் (இதழாசிரியர்கள்). கொழும்பு 4: இராமநாதன் இந்து மகளிர் கல்லூரிஇ பம்பலப்பிட்டிஇ 1வது பதிப்புஇ ஜனவரி 2001. (கொழும்பு: அச்சக விபரம் தரப்படவில்லை).

46 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14.5 சமீ.

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி (Ramanathan Hindu Ladies College) கொழும்பில் அமைந்துள்ள ஒரு இந்துப் பெண்கள் பாடசாலை ஆகும். 1981 ஜனவரி 19 அன்று 26 மாணவிகளுடனும் 2 ஆசிரியர்களுடனும் கொழும்புஇ பம்பலப்பிட்டியில் ஆர். ஏ. டீ. மெல் மாவத்தையில் (முன்னைய டூப்ளிகேஷன் வீதி) இப்பாடசாலை தொடங்கப்பெற்று வளர்ச்சி அடைந்து வந்துள்ளது. இதன் வளர்ச்சிப்பாதையில் இருபதாம் ஆண்டு நிறைவையொட்டிய நிகழ்வு 19.01.2001 அன்று இடம்பெற்ற வேளையில் இச்சிறப்பிதழ் வெளியிடப்பட்டது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27490).

ஏனைய பதிவுகள்