மலர்க் குழு. சுன்னாகம்: ஏழாலை மேற்கு சைவ சன்மார்க்க வித்தியாசாலை, ஏழாலை, 1வது பதிப்பு, ஜுலை 2001. (ஏழாலை: மகாத்மா அச்சகம்)
(22), 131, (25) பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5×17 சமீ.
பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களின் பங்களிப்புடன் வெளிவந்துள்ள இச்சிறப்பிதழில் திருவருள் வியாபகத்தை மறவாதிருப்போமாக, அருளாசிச் செய்திகள், வாழ்த்துரைகள், பாடசாலையின் வளர்ச்சிப் பாதையில், பாடசாலை மாணவர்களின் பாட்டுக்களும் கதைகளும், நாணயம் வந்ததெப்படி, மன அழுத்த முகாமைத்துவம், ஆரம்பக் கல்வி புதிய முறையியல், எமது பண்பாடு, நம் வாழ்வு நலம்பெற நல்லதை.., அத்திவாரம் (சிறுகதை), பள்ளி சுமந்த எம்உயிர்மொழி, சாரணியமும் பாடசாலையும், வரலாறு, மகிழ்வின் மூலம் பிள்ளைகளின் உடல், உள,சமூக வளர்ச்சி, சித்தர்கள் கண்ட சமயம், சைவசித்தாந்தம் காட்டும் குருநெறி, புத்திக்கூர்மைபெற பிராண சக்தி, வைதிகக் கல்வி மரபில், திருமந்திரத்தில் சன்மார்க்க நெறி, ஞானத்தின் வெளிப்பாடும் குருசிஷ்ய ஒழுக்கமும், எல்லாம் சிவமயம் ஆகிய 25 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 20811).