சிறப்பு மலர்க்குழு. கொழும்பு: தமிழ்மொழிப் பிரிவு, கல்வி அமைச்சு, 1வது பதிப்பு, டிசம்பர் 2004. (நுகேகொட: தீபனீ அச்சகம்,
464. ஹைலெவல் வீதி, கங்கொடவில111 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 30×21 சமீ.
கல்வி அமைச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் 30.12.2004 அன்று நடத்தப்பட்ட அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிக்கான பரிசளிப்பு விழாவின்பொழுது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். ஆசிச் செய்திகள், வாழ்த்துச் செய்திகளுடன், விபுலானந்த அடிகளாரின் கல்வித் தொண்டு, தமிழ் இலக்கியத்துக்கு முஸ்லிம்களின் பங்களிப்பு, தெய்வம் இருப்பதை நிலைநாட்டும் தீர்ப்பு, நீரர மகளிர் காவியக் கனவு, விபுலானந்தம், முதலாம் உலகப்போர் (1914-1918), சமாதானமா சர்வாதிகாரமா, தாய், எங்கள் நாடு, ஒழுக்கம் உயர்வு தரும், உயிர்களிடத்தில் அன்பு வேண்டும், விஞ்ஞானத்தில் விளைவுகள், இலக்கியமும் சமூகமும், முயற்சி திருவினையாக்கும், கலங்காதிரு மனமே, மனந்திருந்து மனிதா, கானல் கனவுகள், மாதர்க்குண்டு சுதந்திரம், ஓர் இளந்தென்றல் புயலாகிறது ஆகிய படைப்பாக்கங்களுடன் தமிழ்த்தினப் போட்டி முடிவுகள், இறுதிப் பெறுபேறுகள், பங்குபற்றியோர் விபரம் ஆகிய தகவல்களும் இம்மலரில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39161).