சிறப்பு மலர் . இ.சண்முகசர்மா (அமைப்பாளர்). கொழும்பு: கொழும்பு கல்வி வலயம், 1வது பதிப்பு, ஜுன் 1997. (கொழும்பு: ஸ்ரீசக்தி பிரின்டிங் இன்டஸ்ட்ரீஸ்)
(150) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.
பிரதம விருந்தினராக வந்திருந்த மேல்மாகாண முதலமைச்சரின் (சுசில் பிரேமஜெயந்த) முன்னிலையில் 30.06.1997 அன்று கொழும்பு 13, விவேகானந்த கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்மொழித் தின விழாவின்போது வெளியிடப்பட்ட சிறப்பு மலர். பிரதிக் கல்விப் பணிப்பாளர் திரு. இ.சண்முகசர்மா அமைப்பாளராக இருந்து நிகழ்வையும் விழா மலர் வெளியீட்டினையும் ஒழுங்குசெய்திருந்தார். விளம்பரங்களை அளவுக்கு அதிகமாகக் கொண்டிருக்கும் இம்மலரில் ஆங்காங்கே சில அறிக்கைகளும், மாணவர்கள், ஆசிரியர்களின் ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27129).