தி.அபராஜிதன் (இதழாசிரியர்). சாவகச்சேரி: தென்மராட்சி கல்வி வலயம், கல்வித் திணைக்களம், 1வது பதிப்பு, 2014. (சாவகச்சேரி: கஜானன் பன்முக சேவைகள், மீசாலை).
xix, 44 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24×17.5 சமீ.
சாவகச்சேரி, தென்மராட்சிக் கல்வி வலயம் 2014 மார்கழியில் ஒழுங்குசெய்த பிரதேச பாடசாலைகளுக்கிடையிலான கலைவிழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். ஆசிச் செய்திகள் வாழ்த்துரைகளுடன் விழா பற்றிய விழா இணைப்பாளர் கோபாலபிள்ளை கயிலாசநாதனின் அறிக்கையும், மண் மகிழ மனம் குளிர மெருகூட்டிய மார்கழித் திங்கள் முழுநிலா (தி.அபராஜிதன்), தென்மராட்சியின் பண்பாட்டைப் பிரதிபலித்த மார்கழித் திங்கள் முழுநிலா நாள் கலைவிழாவின் ஊர்திப் பவனி- ஒரு பார்வை (க.க.ஈஸ்வரன்), தமிழர் மரபில் இன்னியம்: ஒரு கண்ணோட்டம் (க.குணரத்தினம்), இன்னியத்தில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய வாத்தியங்கள் (திருமதி புனிதகுமாரி ஈழநேசன்), நாட்டியக் கலையில் நவரசம் (வி.சுனில் ஆரியரத்ன), காலந்தோறும் இசை (கு.ஜோதிரட்ணராஜா), பின்னல் கோலாட்டம்: ஓர் அறிமுகம் (தர்சினி பீதாம்பரன்) ஆகிய ஆக்கங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 58278).