12493 – மகாஜனன் பாரிஸ்-மலர் 1993.

சின்னத்துரை மனோகரன் (இதழாசிரியர்), ப. பாலசிங்கம் (இதழ் ஆலோசகர்). பிரான்ஸ்: எம்.சின்னத்துரை, பாரிஸ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம், 73, Rue Doudeauville, 75018,Paris1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (அச்சக விபரம் தரப்படவில்லை).

80 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28.5×20.5 சமீ.

பாரிஸ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் உருவாக்கப் பட்ட இரண்டாவது ஆண்டு நிறைவில் இம்மலர் வெளியிடப்பட்டுள்ளது. தெல்லிப்பழை, மட்டக்களப்பு, கொழும்பு, லண்டன், கனடா என விரிந்த இக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கங்களின் வரிசையில் ஆறூவது கிளை இதுவாகும். இவ்விதழில், மகாஜனக் கல்லூரியின் இலக்கியப் பாரம்பரியம் (நா. சண்முகலிங்கன்), அசோக மரங்களும் சிறைவைக்கப்பட்ட நினைவுகளும் (இளவாலை விஜயேந்திரன்), ‘வு” வடிவில் இருந்தது வளர்ந்தது -பாடசாலை வரலாறு (இ.சிவசோதி, இரண்டு அஞ்சலிகள்: குலநாதன் மாஸ்டர், ஆசிரியர் கதிரேசர்பிள்ளை (உ.சேரன்), நெருடல்-சிறுகதை (புவனன்), இரத்தக் கண்ணீர்- சிறுகதை (மாதினிராஜ்), ஏக்கங்கள்-சிறுகதை (சி.ராதாகிருஷ்ணன்), கந்தசாமி மாஸ்டர் (ச.சதர்சன்), எங்கள் வு.P.(பத்மநாதன்) காலமானார்: கண்ணீர் அஞ்சலி, திருக்குறளில் உலக நெறி (நா.சிவபாதசுந்தரனார்), பிரான்சிய கல்விமுறை (தினேஷ் சங்கர் பாலேஸ்வரதன்), புலம்பெயர்ந்த நாடுகளில் பழைய மாணவர் (சிவலிங்கம் சிவபாலன்), தெல்லிப்பழை அருளம்பலம் துரையப்பாபிள்ளை: பாவலர் முதல் ஈழத்து நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி வரை (மயிலங் கூடலூர் பி.நடராஜன்) ஆகிய படைப்பாக்கங்களை இம்மலர் கொண்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 14497)

ஏனைய பதிவுகள்