12497 – யா/இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் பவளமலர் 1922-1997.

மலர்க் குழு. யாழ்ப்பாணம்: மெய்கண்டான் மகா வித்தியாலயம், இளவாலை, 1வது பதிப்பு, 1997. (கொழும்பு 13: செவ்வந்தி பதிப்பகம், இல. 130, ஸ்ரீ குணானந்த மாவத்தை).

xxxii, 170 பக்கம், அட்டவணைகள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27×21 சமீ.

இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலயத்தின் வரலாற்றையும், வளர்ச்சியையும், கடந்த 75 ஆண்டுக்காலப் பகுதியில் பாடசாலைச் சமூகத்திற்கு அது ஆற்றிய அளப்பரிய சேவையையும் ஆவணப்படுத்தும் வகையில் இச்சிறப்புமலர் உருவாக்கப்பட்டுள்ளது. 1978இல் முன்னர் வெளியிடப்பட்ட பொன்விழா மலர் அதுவரைகாலத்திற்குட்பட்ட வரலாற்றாவணமாகப் பதிவுபெற்றமையால், இப்பொழுது வெளியிடப்பெறும் பவளவிழா மலரில் முதல் ஐம்பதாண்டு வரலாற்றுப் பதிவுகள் சுருக்கமாகவும், பின்வந்த 25 ஆண்டுக்கால வரலாற்றுப் பதிவுகள் விரிவாகவும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஆசிரியர்-மாணவர்களின் ஆக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 39228).

ஏனைய பதிவுகள்

12571 – மாணவர் மஞ்சரி (Student’s Bouquet of Verses in Tamil).

அ.ஜே.ஷாவ்றர். கொழும்பு: அ.ஜே.ஷாவ்றர், தலைமைத் தமிழ்ப் பண்டிதர், பரி.தோமஸ் கலாசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 1933. (அச்சக விபரம் தரப்படவில்லை). xx, 163 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12.5 சமீ. ‘திரு

14156 நாவலர் நூற்றாண்டு நினைவு விழாச் சிறப்பிதழ் 1979.

நா.சோமகாந்தன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 7: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சபை, இல. 4, ஹோர்ட்டனடெரஸ், 1வது பதிப்பு, 1979. (கொழும்பு 12: குமரன் புத்தக இல்லம், 201, டாம் வீதி). (148) பக்கம், புகைப்படங்கள்,