12507 – சமகால உளவியல்.

இந்திரா செல்வநாயகம். வவுனியா: தமிழ் மன்றம், வ/தேசிய கல்வியியற் கல்லூரி, 1வது பதிப்பு, மே 2017. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம்).

xv, 141 பக்கம், விலை: ரூபா 350.00, அளவு: 21×15 சமீ., ஐளுடீN: 978-955-38057-0-6.

‘சமகால உளவியல்” என்ற தலைப்பில் வெளிவரும் கல்வியியல்சார்ந்த இந் நூலில், உள்ளடக்கற் கல்வி, விழுமியக் கல்வி, சீர்மியக் கல்வி, சமூக உறவுகளை மேம்படுத்தும் கல்வி, முகாமைத்துவ உளவியல் நுட்பங்கள் முதலாம் துறைகளுடன் இணைந்த கல்வியியல் நூலாக்கமாக அமையப்பெற்றுள்ளது. விசேட கல்வித் தேவையுடையவர்களை வகைப்படுத்தல், விசேட கல்வி ஆசிரியருக்குரிய இலட்சணங்கள், மெதுவான உளவளர்ச்சிப் போக்கும் ஆசிரியரின் விசேட செயற்பாடுகளும், செவிச் செல்வமும் பேணும் வழிமுறைகளும், கவனித்தற் குறைவு அதீத செயற்பாட்டுக் கோளாறு, கற்றல் இடர்பாடுடைய மாணவர்களுக்கான கல்வி, பார்வையற்றோருக்கான நூலக வசதிகளை மேம்படுத்தல், உடல்நல பாதிப்புடைய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கை, பேச்சுத்திறன் குறை மாணவர் மீதான கவனம், உட்படுத்தற் கல்வி விருத்தியில் தேசிய கல்வியியற் கல்லூரிகளின் பங்களிப்பு, கல்வி நிறுவன தலைமைத்துவத்தில் உளவியலின் பங்கு, பாடசாலைகளில் சீர்மியம், மனவெழுச்சிகளும் அதன் விளைவுகளும், கற்றலுக்கான ஊக்கச் செயற்பாடுகள், வகுப்பறை முகாமைத்துவ உளவியல் நுட்பம், பாடசாலையில் ஆசிரியர் மாணவர் உறவு, மனப்பாங்கு விருத்தியும் நன்னடத்தைப் பண்புகளை உருவாக்குதலும், மனிதப் பண்புகளை வளர்க்கும் மையங்களாக நூலகம், சூழலுடன் இயைபு பெறுவதில் சமகாலச் சிந்தனையின் தேவை ஆகிய 19 அத்தியாயங்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62209). மேலும் பார்க்க: 1201

ஏனைய பதிவுகள்

12043 அம்பிகையின் மகத்துவங்கள்.

தம்பிப்பிள்ளை காசிநாதன். யாழ்ப்பாணம்: தம்பிப்பிள்ளை காசிநாதன், ஓய்வுபெற்ற பிரதிப் பதிவாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, ஜுன் 1998. (யாழ்ப்பாணம்: ஏழாலை மஹாத்மா அச்சகம், கந்தர்மடம்). (14), xiv, 77 பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,