ஆசிரிய கல்வி நிறுவகம். மகரகம: ஆசிரிய கல்வி நிறுவகம், தேசிய கல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1993. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், 1-டீஇ P.வு. டீ சில்வா மாவத்தை).
143 பக்கம், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 28×20.5 சமீ.
மேலும் ஆறு அத்தியாயங்கள் கொண்ட இரண்டாவது பாகமான இந்நூலில் வகுப்பறை முகாமைத்துவம்ஃ மேற்பார்வைஃ பாடசாலை ஆளணிக் குழுக்கள் (ஆசிரியரும் மாணவரும்) மீது செல்வாக்குச் செலுத்தும் சட்டதிட்டங்கள்ஃ பாடசாலைக் கற்றல் சூழ்நிலையும் ஒழுங்கமைப்பும் கலாசாரமும்ஃ பாடசாலை சம்பந்தமான உறவுகள்ஃ ஆசிரியர் நலனோம்புகையும் தொழில் விருத்தியும் ஆகிய அத்தியாயங்களில் பாடவிதான முகாமைத்துவமும் பாடசாலை ஒழுங்கமைப்பும் பற்றி விளக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 41182)