12516 – பிள்ளைகளுக்குச் சமாதானத்தைக் கற்பித்தல்:

ஓர் மாதிரிப் பாடத்திட்டம் (உயர் இடைநிலை வகுப ;புகளுக ;காக). ஏ.எஸ்.பாலசூரிய (ஆங்கில மூலம்), ஆர்தர் ஜோன்ஸ் பெர்னாண்டோ (தமிழாக்கம்), தை.தனராஜ் (பதிப்பாசிரியர்). மகரகம: கல்வி முகாமைத்துவ அபிவிருத்தித்துறை, தேசியகல்வி நிறுவகம், 1வது பதிப்பு, 1995. (கோட்டே: கிரபிக்ஸ் சிஸ்டம்ஸ் லிமிட்டெட், இல. 11, உஸ்வத்த மாவத்தை).

ix, 270 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ., ஐளுடீN: 955-597-308-3.

Teaching Peace to Children (Model lessons for upper secondary classes) என்ற நூலை ஏ.எஸ்.பாலசூரிய அவர்கள் யூனிசெப் நிறுவனத்தின் Education for Conflict ResolutionProjectஎன்ற வேலைத்திட்டத்தின்கீழ் எழுதியிருந்தார். சமாதானக் கல்வியை அறிமுகப்படுத்தும் நோக்குடன் பாடசாலைகளுக்கு இலவசமாக விநியோகிக்கப் பட்ட அந்த நூலின் தமிழாக்கம் இதுவாகும். பாடத்திட்ட அறிமுகம், சமாதானம் என்றால் என்ன? மானிட வன்முறைப் பண்பு பற்றிய பிரச்சினை, சமாதானக் கல்வியும் ஆசிரியரும், ஆகிய அறிமுக அத்தியாயங்களைத் தொடர்ந்து அன்போடு வாழ்வோம், எல்லாவற்றினதும் நல்ல பக்கத்தை நோக்குவோம், விலங்குகள் மீது கருணை காட்டுவோம், இம்சையின் தன்மையை விளங்கிக்கொள்வோம், இம்சையைத் தவிர்ப்போம், எமக்கிடையே உள்ள பிணக்குகளை பரஸ்பர ஒத்துழைப்பு மூலம் தீர்த்துக்கொள்வோம், சமூகத்தை மாற்றியமைப்பதில் அஹிம்சைவழிச் செயன்முறைகளைக் கைக்கொள்வோம், சமாதானம் நிறைந்த உலகத்தைக் கட்டியெழுப்புவோம் ஆகிய எட்டு மாதிரிப் பாடங்கள் இடம பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 26984).

ஏனைய பதிவுகள்

Auffinden Reel Gems $ 1 Kaution

Content Alle Infos Zu “ihr Morgenland Produktbeschreibung Des Verlags Rang Das Kingsbridge Bücher Beispielsätze Je Das Tätigkeitswort Entdecken Rezensionen Über Bildern Meine wenigkeit entdecke weder

12534 – அடிப்படைச் சிங்களம்.

நூல் வெளியீட்டுக் குழு. கொழும்பு 1: அரசகரும மொழிகள் திணைக்களம், பாரொன் ஜயத்திலக்க மாவத்தை, 1வது பதிப்பு, 1993. (கொழும்பு 2: லேக் ஹவுஸ் பிரின்டர்ஸ், இல. 41, று.யு.னு.ராமநாயக்க மாவத்தை)(10), 191 பக்கம்,