12521 – வணிகக் கல்வியும் கணக்கீடும்: தரம் 11.

இ.இரத்தினம். யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம், 3வது பதிப்பு, 2003, 1வது பதிப்பு, 2001, 2வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம்: உயர்கல்விச் சேவைகள் பதிப்பகம்).

(4), 124 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21.5×14.5 சமீ.

க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும் என்ற பாடம் 2000ஆம்ஆண்டிலிருந்து 10ஆம் தரத்திலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நூல் தேசிய கல்வி நிறுவனத்தின் 11ம் தரத்தின் புதிய பாடத்திட்டத்துக்கு அமைவாக அனைத்து அலகுகளையும் உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலகுவான முறையில் விளங்கக்கூடியதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. முதலீட்டு வாய்ப்புகளும் நிறுவனங்களுக்கான நிதிச் சேவையும், முயற்சியாண்மை, கிரயமும் விலை நிர்ணயமும், தகவல் தொழில்நுட்பம், நிறுவன முகாமைத் தொழிற்பாடு, காசேட்டுத் திருத்தமும் வங்கி இணக்கக்கூற்றும், தொங்கல் கணக்கு (வழுக்களைச் செவ்வைசெய்தல்), முடிவுக் கணக்கு, இலாப நோக்கற்ற நிறுவனங்களின் கணக்கு, இறுதிக் கணக்கு நிலைக்குத்து வடிவம் ஆகிய பாடப்பரப்புகள் விளக்கப்பட்டுள்ளன. க.பொ.த. சாதாரண தரம் 2002 பரீட்சை வினாக்கள் இறுதியில் தரப்பட்டுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 29676).

ஏனைய பதிவுகள்

14588 என்னமோ இருக்கிறம்.

கந்தையா பத்மானந்தன். காரைநகர்: அம்மாத்தை வெளியீட்டகம், வாரி வளவு, 1வது பதிப்பு, 2019. (தெகிவளை: அனுபவ பதிப்பகம், Creaze Digital 14, அத்தபத்து டெரஸ்). vi, 71 பக்கம், விலை: ரூபா 250., அளவு: