12857 – ஐங்குறுநூறு: மூலமும் உரையும்.

தி.சதாசிவ ஐயர் (பதிப்பாசிரியர்). சென்னை 600113: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சி.ஐ.டீ வளாகம், தரமணி, 1வது பதிப்பு, 1999. (சென்னை 600 014: வி.கருணாநிதி, தி பார்க்கர் கொம்பெனி, 293, அகமது கொம்பிளெக்ஸ், 2வது தளம், இராயப்பேட்டை நெடுஞ்சாலை).

xxxii, 360 பக்கம், விலை: இந்திய ரூபா 85.00, அளவு: 21.5 x 14 சமீ.

தமிழ் வளர்ச்சித்துறையின் அரிய நூல் வெளியிடும் திட்டத்தின்கீழ் நிதியுதவி பெற்று ஈழத்துத் தமிழறிஞரின் இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. முகாந்திரம் தி. சதாசிவ ஐயர் (1882 – நவம்பர் 27, 1950) பல வடமொழி இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் யாழ்ப்பாணம், தெற்கு அளவெட்டியில் பெருமாக்கடவை என்னும் ஊரில் 1882 ஆம் ஆண்டு தியாகராஜ ஐயர், செல்லம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கல்வித் துறையில் ஆசிரியராக, தலைமை ஆசிரியராக, பாடசாலைப் பரிசோதகராகப் பணியாற்றிப் பின்னர் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்த கல்வி மாவட்டத்துக்கு வித்தியாதரிசியாகவும் பணியில் இருந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் பல தமிழ்ப் பண்டிதர்களை உருவாக்கிய ஆரிய திராவிட பாஷாவிருத்திச் சங்கத்தை நிறுவியதில் முக்கிய பங்காற்றியவர் சதாசிவ ஐயர். சங்கம் நடாத்திய பிரவேச பண்டிதர், பால பண்டிதர், பண்டிதர் பரீட்சைகளில் தேறியவர்களுக்கு பள்ளிகளில் ஆசிரிய நியமனம் கிடைக்க வழி செய்தார். தனது சொந்தச் செலவில் சுன்னாகம் கதிரமலை தேவஸ்தானத்துக்கு எதிரில் ‘பிராசீன பாடசாலை’ என்ற பெயரில் பாடசாலை ஒன்றை அமைத்தார். இப்பாடசாலையில் தமிழும் சம்ஸ்கிருதமும் தக்க அறிஞர்களைக் கொண்டு பயிற்றுவிக்கப்பட்டு வந்தன. புகழ் மிக்க தமிழறிஞர் வித்துவ சிரோமணி சி. கணேசையர் இப்பாடசாலைக்கு பொறுப்பாக இருந்துள்ளார். தமிழறிஞர் தி. சதாசிவ ஐயர் பதிப்பித்துள்ள இந்நூலின் அணிந்துரை, ஆய்வுரை, முகவுரையைத் தொடர்ந்து சங்கநூல்கள், ஐங்குறுநூறு, தொகுப்பித்தவர் முதலியோர் வரலாறு, பதிப்புரை ஆகியனவும், தொடர்ந்து ஐங்குறுநூறு மூலமும் உரையும் இடம்பெற்றுள்ளன. ஐங்குறுநூறு விஷயசூசிகை, செய்யுள் முதற்குறிப்பகராதி, அரும்பத அகராதி ஆகியனவும் நூலின் இறுதியில் காணப்படுகின்றன. (இந் 894.8(63) சங்க இலக்கியங்கள் தொடர்பானவை

ஏனைய பதிவுகள்

14749 எரிமலை: நாவல்.

தி.ஞானசேகரன். கொழும்பு 6: ஞானம் பதிப்பகம், 3B, 46ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). xx, 208 பக்கம், விலை: ரூபா 600.,

12198 – நிதானமான சமூகத்தை நோக்கி.

சிறி ஹெட்டிகே (ஆங்கில மூலம்), சோ. சந்திரசேகரன், மா.கருணாநிதி (தமிழாக்கம்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39,