வில்லிபுத்தூராழ்வார் (மூலம்), ந.ச.பொன்னம்பலபிள்ளை (புத்துரை). யாழ்ப்பாணம்: வீ.நாராயணசுவாமி நாயுடு இணை வெளியீடு, மு.மூத்ததம்பிச் செட்டியார், 1வது பதிப்பு, ஜுலை 1886. (யாழ்ப்பாணம்: மெய்ஞ்ஞானப்பிரகாச யந்திரசாலை, வண்ணார்பண்ணை).
320 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 16 சமீ.
வில்லிபுத்தூராழ்வார் அருளிச்செய்த மகாபாரத மூலத்துக்கு காரைக்குடியைச் சார்ந்த முத்துப்பட்டணம் ரா.ம.கு.ராம.சொக்கலிங்க செட்டியாரும், அரிமளம் அ.செ.ப.அண்ணாமலைச் செட்டியாரும் வேண்டிக்கொண்டபடி, யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் மருகரும் மாணாக்கருமாகிய ந.ச.பொன்னம்பலபிள்ளை அவர்கள் புத்துரை எழுதிவந்தார். இவை வண்ணார் பண்ணையில் புத்தகவியாபாரம் செய்துவந்த வீ.நாராயணசுவாமி நாயுடுவாலும், அவ்வூரைச்சேர்ந்தவரும் விஞ்ஞானவர்த்தனி பத்திரிகை ஆசிரியருமான மு. முத்துத்தம்பி செட்டியாராலும் தமது மெய்ஞ்ஞானப் பிரகாச யந்திரசாலையில் 40 பக்க மாத சஞ்சிகைப் பிரசுரங்களாக 12.7.1886 அன்று முதல் ஒரு வருடமளவில் தொடர்ச்சியாக பிரசுரிக்கப்பட்டு சந்தாதாரருக்கு விநியோகிக்கப்பட்டு வந்துள்ளது. பின்னாளில் அந்தப் பிரதிகளின் பெருந்தொகுப்பாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21653).
மேலும் பார்க்க: 13A24