க.சின்னராஜா (இதழ் ஆசிரியர்). எஸ்.கே.பரமேஸ்வரன், கமலா செல்வதுரை (உதவி ஆசிரியர்கள்). பேராதனை: புவியியற் சங்கம், புவியியல் துறை, இலங்கைப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: நாமகள் அச்சகம்).
(9), 80 பக்கம், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24.5 x 17.5 சமீ.
இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பேராதனை வளாகப் புவியியல் சங்கம் வெளியிடும் ஆண்டு மலர். ‘இலங்கையின் விவசாயம்’-சிறப்பு மலராக இவ்விதழ் வெளியிடப்பட்டுள்ளது. இவ்விதழில் வெளியாய்வு முறைகளும் நிலப் பயன்பாட்டு ஆராய்ச்சியும் (சோ.செல்வநாயகம்), இலங்கையின் குடியிருப்பு வகைகளும் நிலப்பயன்பாடும் (பி.எல். பண்டிதரத்னா), இலங்கையின் மண்வகைகளும் புவிச்சரிதவியலும் (டி.பி.பட்டியாராய்ச்சி), இலங்கையின் மண்களினது புவியியல் (சி.ஆர்.பானபொக்கே), தென்மேற் பருவக் காற்றும் பயிர்ச்செய்கையும் (ஜோர்ஜ் தம்பையாபிள்ளை), இலங்கையின் பொருளாதார விருத்தியில் விவசாயத்தின் முக்கியத்துவம் (சிட்னி எம்.டி.சில்வா), இலங்கையின் பயிர்ச்செய்கை (பிலிக்ஸ் ஆர். டயஸ் பண்டாரநாயக்கா), இலங்கையின் தேயிலைச் செய்கை (எஸ்.கே. பரமேஸ்வரன்), இலங்கையின் றப்பர்ச் செய்கை (இ.கணேந்திரன்), இலங்கையின் தென்னைப் பயிர்ச்செய்கை (ந.வேல்முருகு), நெல் உற்பத்தியை அதிகரித்தல் (எஸ்.ரி.செனெவிரத்னா), இலங்கையின் மீன்பிடித் தொழில் (கா.ரூபமூர்த்தி), யாழ்ப்பாணப் பகுதியின் பயிர்ச்செய்கைப் பிரச்சினைகளும் கைத்தொழில் விருத்தியும் (சோ.செல்வநாயகம்), இலங்கையின் உணவு உற்பத்தியும் மக்கட் பெருக்கமும் (க.சின்னராஜா), புவியியலும் பொருளாதார நிறைவு பெறத் திட்டமிடுதலும் (கா.குலரத்தினம்) ஆகிய ஆய்வுக்கட்டுரைகளும், வருடாந்த சங்க அறிக்கையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 011846).