12875 – யாழ்ப்பாணப் புவியியலாளன்: இதழ் 3 (1985/1986).

வி.ரவிச்சந்திரன், செல்வி எஸ்.திருமணிச்செல்வி (இதழ்ஆசிரியர்கள்), ளு.வு.டீ. இராஜேஸ்வரன் (ஆலோசக ஆசிரியர்). யாழ்ப்பாணம்: புவியியற் கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஜுலை 1986. (யாழ்ப்பாணம்: ஸ்ரீகாந்தா அச்சகம், 213, காங்கேசன்துறை வீதி).

(16), 100 பக்கம், தகடுகள், விளக்கப்படங்கள், அட்டவணைகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 24 x 18 சமீ.

1984/85க்குரிய இதழ் 2 வெளியிடப்படாத நிலையில் 3வது இதழாக இவ்வாண்டிதழ் வெளிவந்துள்ளது. இதில் கண்டங்களின் பரிணாமம் (ளு.வு.டீ.இராஜேஸ்வரன்), புவிச்சரித வரலாற்றுக் காலத்தில் காலநிலை (செ.பாலச்சந்திரன்), நீரியல் வட்டத்தின் பொதுவான செயல் முறைகள் (க.விமலநாதன்), புவி வெளியுருவவியல் சிந்தனை விருத்திக்கு டேவிஸ் பெர்ங் பங்களிப்பு (இ.மதனாகரன்), எல்லைகளும் எல்லைக்கோடு பற்றிய வரையறையும் சர்வதேச பிரச்சினாயில் அதன் தாக்கமும் (வி.சிவமூர்த்தி), இருதய நிலக் கொள்கையும் ஓரு நிலக்கொள்கையும் (ஜி.எஸ். சிவராசா), இலங்கையின் விவசாயக் காலநிலை (செல்வி தா.ஜெயராணி), இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையில் தேயிலை (செல்வி கே. கேந்திரேஸ்வரி), உலக மீன்வள மீளாய்வு (கே.ரூபமூர்த்தி), இலங்கையின் நன்னீர் மீன்பிடித்தொழில் (எம்.இராதாகிருஷ்ணன்), வடக்குக் கிழக்கு மாகாணங்களின் விவசாயத் திட்டமிடலுக்கு ஆதாரமான சில அம்சங்கள் (மாணிக்கம் புவனேஸ்வரன்), இலங்கையில் விவசாய நிலச்சீர்திருத்த நடவடிக்கை (இரா. சிவசந்திரன்), இலங்கையின் குடித்தொகைக் கொள்கை (செல்வி ந.மேனகா), இலங்கையில் குடித்தொகைப் பிரச்சினையும் குடும்பத் திட்டமிடலின் அணுகுமுறையும் (கா.குகபாலன்), இலங்கையில் நகர வளர்ச்சி (என்.ரங்கநாதன்), வெளிநாட்டு உதவியும் இலங்கையும் (எஸ்.எஸ்.சாலிவாகனன்), இலங்கையில் அபிவிருத்தித் திட்டமிடல் (வி.பரம்சோதி), மூன்றாம் உலக நாடுகளில் நவகுடி யேற்றவாதத்தின் ஊடுருவல் (செல்வி எஸ்.மரியநாயகி) ஆகிய ஆய்வுகள் இவ் விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத் தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 009733).

ஏனைய பதிவுகள்

Boku Ports

Blogs The newest Cons From Pay Games Available in £dos Put Casinos Disadvantages Of Cellular Gambling enterprises For individuals who’re the brand new excited type