12883 – மலேயா-இந்தியா யாத்திரை.

கா. இராமநாதன் செட்டியார். சுழிபுரம்: திரு.பே. கிருஷ்ணர், 1வது பதிப்பு, 1965. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).

iv, 70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 13.5 சமீ.

தனது மலேயா-இந்திய யாத்திரை பற்றிய பிரயாண நூலாக இதனை தமிழகத்தின் கா.இராமநாதன் செட்டியார் அவர்கள் எழுதியுள்ளார். நல்ல கூட்டம் (குழுவினர், விருந்து, நாய்க்கடி), பிரயாணம் (பினாங்கு, கப்பல், முதல் வரவேற்பு), மலையில் (சுப்பிரபாதம், அகண்ட பஜனை, காஞ்சியின் பெருமை), குமரியும் கிழவனும் (காஞ்சியின் பெருமை, காமாட்சி, சேவாஸ்ரமம், அன்பால் கஷ்டம்), தலைநகர் (ஆக்ரா, டெல்லி, இராஜகாட், சட்டசபை, தொலைந்தது), குருபுங்கவர், விடுதலை (ஹரித்துவாரம், திருவேணி, காசிநாதர், கேதாரிநாதர்), ஏழைப்பூசாரி, அரசாங்க பஸ், பெருஞ்சோதி, வருமோ (பழநி, ஆவினன்குடி), அவனாட்சி, காவேரிக் கரையில், கோவில், பிறந்த ஊர், சோழநாடு, சிவலோகம் ஆகிய 17 தலைப்பு களில் இப்பிரயாணநூல் சுவையான அனுபவப் பகிர்வாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 4040).

ஏனைய பதிவுகள்