12887 உமா கரம்(புற்றுநோய் தவிர்ப்போம் என்ற நூலின் மீள்பிரசுரம்).

சி.உமாகரன். நயினாதீவு: சிவசம்பு உமாகரன் குடும்பத்தினர், திருவாலவாய், 3ஆம் வட்டாரம், 1வது பதிப்பு, பெப்ரவரி 2016. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48டீ, புளுமெண்டால் வீதி).

(6), 128 பக்கம், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22.5 x 15 சமீ.

நயினாதீவு-3, அமரர் சிவசம்பு உமாகரன் (31.1.1964-27.1.2016) அவர்களின் நினைவு மலராக வெளிவரும் இந்நூல் ‘புற்று நோய் தவிர்ப்போம்’ என்ற தலைப்பில் கா. வைத்தீஸ்வரன் 2015இல் வெளியிட்ட நூலினை உள்ளடக்கி வெளிவந்துள்ளது. புற்றுநோய்-பொதுவான கண்ணோட்டம், கலங்களின் அசாதாரண வளர்ச்சியே புற்றுநோய், புற்றுநோய் ஆரம்பநிலையில் இனம்காணப்படல் வேண்டும், நோய்க்கெதிரான சிறந்த ஆயுதம் ஆரம்பத்தில் இனம் காண்பதே, நோய் அதிகரிப்புக்கான காரணிகள், கறுப்புப் புள்ளி-ஆரம்ப அறிகுறிகள், தொண்டைகுரல்வளைப் புற்றுநோய், கற்றது கைம்மண் அளவு, களப் புற்றுநோய், வாய்ச் சுகாதாரம், வாய்க்குழிப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோயைக் குறைப்பதற்கான ஐந்து எளிமையான வழிமுறைகள், தைரொயிட் புற்றுநோய், இரத்தப் புற்றுநோய், புற்றுநோய்-உணவுப் பழக்கவழக்கத்திற்கு இடையேயான தொடர்புகள், உணவும் ஒட்சிசனெதிரிகளும், பெருங்குடற் புற்றுநோய், புராஸ்ரேட் புற்றுநோய் ஆகிய 19 அத்தியாயங்களில் எழுதப்பெற்றுள்ள இந்நூலின் இறுதியில் நோய்வாய்ப் பட்டிருக்கும் நண்பருக்கு உதவுவது எப்படி? பித்தப்பை மற்றும் பித்தக்கானில் ஏற்படும் புற்றுநோய், குழந்தைகளில் ஏற்படும் புற்றுநோய் ஆகியவை பின்னி ணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

Content Gündem Mevcut Bahis Türleri: Hangi Casino Oyunu Kazandırır İlk Para Yatırma Bonusu Sensible Slot Oyunları En Iyi Pragmatic Oyunları Mostbet’te Yeni Bir Oyuncu Olarak

12163 – பத்தினி வழிபாடு.

சி.கணபதிப்பிள்ளை (பதிப்பாசிரியர்). மட்டக்களப்பு: சி. கணபதிப்பிள்ளை, தமிழாசிரியரும் சோதிடரும், அட்டப்பள்ளம், நிந்தவூர், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 1978. (யாழ்ப்பாணம்: விபுலானந்த அச்சகம்). (2), 34 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. மட்டக்களப்பின்

14151 நல்லைக்குமரன் மலர் 2008.

நல்லையா விஜயசுந்தரம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: சைவசமய விவகாரக்குழு, யாழ்ப்பாண மாநகராட்சி மன்றம், 1வது பதிப்பு, 2008. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ், 15/2B, முருகேசர் ஒழுங்கை, நல்லூர்). 204 + (38) பக்கம், புகைப்படங்கள், தகடுகள்,

12772 – ஆயிரம் கவிஞர்கள் கவிதைகள் (32 நாடுகள் 1098 கவிஞர்கள்).

யோ.புரட்சி (தொகுப்பாளர்), யமுனா நித்தியானந்தன் (பதிப்பாசிரியர்). முல்லைத்தீவு: செல்லமுத்து வெளியீட்டகம், வள்ளுவர்புரம், விசுவமடு, 1வது பதிப்பு, ஜனவரி 2017. (கொழும்பு 13: சாய் அச்சகம், இல. 2, இரட்ணம் வீதி). 1861 பக்கம், புகைப்படங்கள்,