த.கலாமணி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, மார்கழி 2016. (பருத்தித்துறை: பரணி அச்சகம், நெல்லியடி).
76 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 20.5 x 14.5 சமீ., ISBN: 978-955-4676-51-0.
ஆசிரியர் தனது மனதிற் பதிந்த சில ஆளுமைகள் பற்றிய கட்டுரைகளை இந் நூலில் தந்துள்ளார். பண்டிதர் க.சச்சிதானந்தன், கலாவினோதன் எம்.பீ. அண்ணாசாமி, துணைவேந்தர் பேராசிரியர் அ.துரைராஜா, பேராசான் க. தங்கவடிவேல், ஆசிரியர் க.முருகேசு, கலைஞானகேசரி க.பரஞ்சோதி, நடிகமணி வி.வி.வைரமுத்து, சைவப்பெரியார் கா.சூரன், அல்வாய் க. வேலுச் சோதிடர், அல்வாயூர் மு.செல்லையா, அதிபர் வே.த.தணிகாசலம், கலாபூஷணம் வே.க. பாலசிங்கம் ஆகிய பன்னிரு ஆளுமைகள் பற்றிய பதிவுகள் படிப்போர்க்குப் பயனுள்ள வகையிலும் வரலாற்றில் பதியப்படவேண்டும் என்ற நோக்கிலும் தந்துள்ளார். இது 65ஆவது ஜீவநதி வெளியீடாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61478).