மலர்க் குழு. கனடா: ஜீ.சுப்பிரமணியம், 2425, Eglinton Ave. East, Unit 6A,Scarborough, Ontario, 1வது பதிப்பு, 2001. (அச்சக விபரம் தரப்படவில்லை).
(4), 73 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5 x 14 சமீ.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஓய்வுபெற்ற உதவி ஆணையாளர் கே.கே. சுப்பிரமணியம் (சமாதான நீதவான், இல.28, ரட்ணகார பிளேஸ், தெகிவளை) அவர்களின் அகவை எழுபது பூர்த்தியானதையிட்டு அவரது குடும்பத்தினர் வெளியிட்ட காலப் பெட்டகம். இதில் அவரது மலரும் நினைவுகளின் பதிவுகள் புகைப்படங்களுடன் தொகுக்கப்பெற்றுள்ளன. இவரது சமூகப் பணிகள் மற்றும் பெருமைக்குரிய தருணங்களின் புகைப்பட சாட்சியங்கள் என சுயவரலாற்றுப் பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 21412).