12529 – குருக்கேத்திரன் போர்:வடமோடிக் கூத்து.

வடிவேல் இன்பமோகன் (பதிப்பாசிரியர்). வந்தாறுமூலை: கிழக்குப் பல்கலைக்கழகம், 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xxxv, (8), 109 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 600., அளவு: 21×15 சமீ., ISDN: 978-955-1443-91-7.

ஈழத்திலும் தென்னிந்தியாவிலும் பரவலாக வழங்கிவருகின்ற அரியதொரு நாட்டார் கதைமரபின் ஒரு குறிப்பிட்ட வடிவத்தைத் தேடி முயன்று பதிப்பித்திருக்கிறார் கலாநிதி வடிவேல் இன்பமோகன். கள ஆய்வின் அடிப்படையில் அரிய பல தகவல்களைத் திரட்டி, குருக்கேத்திரன் போர் வடமோடிக் கூத்தின் எழுத்துப் பனுவலை அச்சில் கொண்டுவந்துள்ளார். இவர் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் இளமாணிப் பட்டத்தினையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முதுமாணிப்பட்டத்தினையும், கலாநிதிப் பட்டத்தினையும் பெற்றவர். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் சிரேஷ்டி விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றார். இலங்கையில் அரையாண்டிதழாக வெளிவரும் மொழிதல் ஆய்வேட்டின் ஆசிரியர்களில் ஒருவராகவும் பணியாற்றுகின்றார். இந்நூலின் பின்னிணைப்பாக 2017இல் குருக்கள்மடத்தில் இடம்பெற்ற குருக்கேத்திரன் போர் கூத்தின் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்

13216 கந்தபுராணம்: தெய்வயானையம்மை திருமணப்படலம்.

ச.வயித்தியலிங்கபிள்ளை (உரையாசிரியர்), தி.செல்வமனோகரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 4: இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, மீள்பதிப்பு, ஓகஸ்ட் 2018, 2வது பதிப்பு, 1955. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2,