வே. நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்ரி பப்ளிக்கேஷன்ஸ், தபால் பெட்டி எண் 64, 3வது பதிப்பு, ஜனவரி 2004. (தெகிவளை: காயத்திரி அச்சகம்).
56 பக்கம், விலை: ரூபா 75.00, அளவு: 21ஒ15 சமீ., ISDN: 955-97518-8-3.
தமிழில் வழங்கும் 4000க்கும் மேற்பட்ட தற்காலப் பயன்பாட்டிலுள்ள ஒத்த கருத்துச் சொற்களும் எதிர்க் கருத்துச் சொற்களும் இந்நூலில் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. புலமைப்பரிசில் மாணவர்கள் முதல் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை மாணவர்கள் வரையான மாணவர்களைக் கருத்திற்கொண்டு இந் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. ஒத்த கருத்துச் சொற்களையும், எதிர்க்கருத்துச் சொற்களையும், பின்னிணைப்பு பகுதியில் பல முக்கிய விடயங்களையும் கொண்ட தாகத் தொகுக்கப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 49483).