12552 – தமிழ்: ஆண்டு 6.

த.கனகரத்தினம், இ.விசாகலிங்கம், எம்.ஆரிப், ஆ.ஐ.ளு.யு.கலீல் (பதிப்பாசிரியர்கள்). கொழும்பு 10: கல்வி வெளியீட்டுத் திணைக்களம், மாளிகாவத்தைச் செயலகம், 4வது பதிப்பு, 1988, 1வது பதிப்பு, 1985, 2வது பதிப்பு, 1986, 3வது பதிப்பு, 1987. (கொழும்பு: அரசாங்க அச்சகக் கூட்டத்தாபனம்).

viii, 220 பக்கம், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×13.5 சமீ.

இந்நூலில் மொழிப்பயிற்சியை வளர்ப்பதற்கான பாடங்களாக வளரும் பயிர், இலக்குப் பார் அம்பை விடு, இரவும் பகலும், தீராத விளையாட்டுப் பிள்ளை, கண்டிப் பெரஹர, இன்றைக்கு இறைத்தது போதும், நான் தான் மகாவலி, ஆறு, வேம்பின் வீம்பு, அறிஞர் அறபி பாஷா, உண்மையின் உயர்வு, பெருமானே நாயகமே, நான் சாரணன் ஆனேன், அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ், புதிய பாட்டு, முரசு, பூங்காக்கள், ஒரு குழந்தை-இரண்டு தாய், விண்வெளிப் பயணம், அருளாளர், சோயா உற்பத்தி, பேராசை பெருநட்டம், ஈழம் கண்ட இப்னு பதூதா, துணிவே துணை, மகா பராக்கிரமபாகு, உண்மைக்குப் பரிசு, நான் ஒரு பழைய பத்திரிகை, அழகான ஊர், விளையாட்டுப் போட்டி, மனமாற்றம், மரங்களைப் பாதுகாப்போம், எலியும் சேவலும், மணிக்கல், அம்மைப்பாலின் கதை, மலையகத்திலிருந்து ஒரு கடிதம், ஒன்றும் இல்லையே குறை, இலங்கையும் அறபு நாடுகளும், இரண்டு கிராமங்களைத் தின்ற ஆடு, தமிழ் வளர்த்த சி.வை. தாமோதரம்பிள்ளை, பெற்றோர் ஆவல், மட்கலம், நான் கொக்கு அல்ல, மருதமுனை நெசவு, பேரின்பம் ஆகிய தலைப்புகளில் 44 பாடங்கள் தரப்பட்டுள்ளன. இந்நூல் வெளியீட்டுக்கான தமிழ்ப்பகுதிப் பொறுப்பாளராக வே.வல்லிபுரம் அவர்கள் பணியாற்றியிருக்கிறார். நூலாக்கக் குழுவில் த.கனகரத்தினம், சு.வேலுப்பிள்ளை, கே.இராஜதுரை, எம்.எஸ். அபுல் ஹஸன், யு.ஊ.யு.ஆ.புகாரி, முக்தார் ஏ.முஹம்மது ஆகியோர் பணி யாற்றியுள்ளனர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வை யிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27121).

ஏனைய பதிவுகள்

Gold Tiger Spielbank

Silver Tiger Spielbank hat sich unter einsatz von Einzahlung 5 Holen Sie sich 25 kostenlose Spins nachfolgende Jahre hinweg event als eines das führenden Verbunden

15800 இரண்டு பூக்கள்: பாட்டிடையிட்ட உரைநடைக்கோவை.

கனக. செந்திநாதன். யாழ்ப்பாணம்: யாழ். இலக்கிய வட்டம், 1வது பதிப்பு, ஏப்ரல் 1977. (யாழ்ப்பாணம்: கூட்டுறவு அச்சகம்). 40 பக்கம், விலை: இந்திய ரூபா 2.00, அளவு: 18.5×12.5 சமீ. இந்நூலில் இரசிகமணி அவர்களின்