சுகன்யா அரவிந்தன். கொழும்பு 11 : சேமமடு பொத்தகசாலை, U.G.50, People’s Park, 1வது பதிப்பு, 2022. (கொழும்பு 11: சேமமடு அச்சகம், 180/1/48, Gaswork Street).
viii, 124 பக்கம், விலை: ரூபா 700., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-685-167-0.
ஆய்வு முறையியலுக்கான இந்நூல் ஆய்வு அறிமுகம், ஆய்வுச் சிக்கலை இனம்காணல், கருதுகோள், இலக்கிய மீளாய்வு, தரவு சேகரிக்கும் நுட்பங்கள், நேர்காணல், வினாக்கொத்து, கள ஆய்வு, தகவல் ஒழுங்குபடுத்தலும் பகுப்பாய்வு செய்தலும், ஆய்வேடு எழுதுதல், அடிக்குறிப்பு, மேற்கோள்கள் ஆகிய பதினொரு இயல்களில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இசைத்துறையில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றும் கலாநிதி சுகன்யா அரவிந்தன் சமூகவியல், கர்நாடக இசை ஆகிய இரு துறைகளிலும் யாழ்.பல்கலைக் கழகத்தில் சிறப்புப் பட்டம் பெற்றவர்.