16005 நூல்தேட்டம் தொகுதி 16.

என்.செல்வராஜா. ஐக்கிய இராச்சியம் : அயோத்தி நூலக சேவைகள், இணை வெளியீட்டாளர், கொழும்பு 6 : குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (கொழும்பு 6 : குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

xviii, 596 பக்கம், விலை: ரூபா 6000., அளவு: 22×14.5சமீ., ISBN: 978-624-6164-13-3.

தாயகத்திலும் புகலிடத்திலும் வெளியிடப்பட்ட ஈழத்துத் தமிழ் நூல்களுக்கான குறிப்புரையுடன் வெளிவந்துள்ள நூல்விபரப்பட்டியலின் பதினாறாவது தொகுதி இதுவாகும். இத்தொகுதியில் மேலும் 1000 நூல்களுக்கான பதிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன. பிரதான பதிவு தூவி தசாம்சப் பகுப்புமுறையைத் தழுவிப் பகுப்பாக்கம் செய்யப்பட்டு, பாடவாரியாகப்; பதியப்பட்டுள்ளது. பதிவுகள் 15001-16000 வரை தொடர் இலக்கமிடப்பட்டுள்ளன. நூல் தலைப்பு வழிகாட்டி, ஆசிரியர் வழிகாட்டி என்பவற்றுடன் இலங்கை தொடர்பான பன்னாட்டவரின் படைப்புக்களும் பட்டியலிட்டுத் தரப்பட்டுள்ளமை இந்நூலின் சிறப்பம்சமாகும்.

ஏனைய பதிவுகள்

10939 எழுத்தாளர் விபரத் திரட்டு.

முல்லை அமுதன். தமிழ்நாடு: ஓவியா பதிப்பகம், 17-16-5A, கலைஞர் கருணாநிதி நகர், வத்தலகுண்டு 642202, 1வது பதிப்பு, டிசம்பர் 2014. (அச்சக விபரம் தரப்படவில்லை). 496 பக்கம், விலை: இந்திய ரூபா 400., அளவு:

9965 இலங்கை இந்தியர் சரித்திரச் சுருக்கம்.

கலகா பெ.தங்கராசா. கண்டி: கலகா பெ.தங்கராசா, மாலதி வெளியீட்டு இல்லம், 57, அம்பிட்டிய வீதி, 1வது பதிப்பு, 1968. (கொழும்பு 10: ஓட்டோ பிரின்டர்ஸ்). (9), 33 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14