என்.செல்வராஜா (தொகுப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: விதை குழுமம், மெய்கண்டான் ஒழுங்கை, சரசாலை தெற்கு, சாவகச்சேரி, 1வது பதிப்பு, ஜனவரி 2022. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், இல. 39, 36ஆவது ஒழுங்கை).
vi, 53 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5சமீ.
நூலகவியலாளர் என்.செல்வராஜா அவர்கள் எழுதிய ‘நமக்கென்றொரு பெட்டகம்” என்ற நூலின் அறிமுக நிகழ்வும் உரையாடலும் 12.9.2021அன்று ZOOM தொழில்நுட்பத்தின் உதவியுடன் இணையத்தளத்தில் அரங்கேற்றம் கண்டது. யாழ் பல்கலைக்கழக நூலகர் கலாநிதி திருமதி கல்பனா சந்திரசேகர், விதை குழுமச் செயற்பாட்டாளர் அருண்மொழிவர்மன் ஆகியோர் இந்நூல் பற்றிய தமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். தொடர்ந்து ‘கிராமிய நூலகங்களும் அவற்றின் சமகாலத் தேவைகளும்” என்ற தலைப்பில் உரையும் உரையாடலும் இடம்பெற்றிருந்தன. மூல உரையை என்.செல்வராஜா நிகழ்த்தினார். தொடர்ந்;தும் பங்கேற்பாளர்களினால் கருத்துரைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இணையவழி ஒழுங்குசெய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் ஒலி/ஒளிப்பதிவு இந்நூல்வழியாக என் செல்வராஜா அவர்களால் எழுத்துருவாக்கம் தொகுக்கப்பெற்று ஆவணப்பதிவாகியுள்ளது.