16016 லிற்றில் பேர்ட்ஸ் (இதழ் 1-2022).

ஆசிரியர் குழு. கிளிநொச்சி : லிட்டில் எயிட் திறன் விருத்தி மையம், கனகராசா வீதி, திருநகர், இணை வெளியீடு, லண்டன், தேசம் பதிப்பகம், 1வது பதிப்பு, 2022. (யாழ்ப்பாணம்: ஜே.ஆர். இன்டஸ்ட்ரீஸ், இல. 7, உடுவில் மகளிர் கல்லூரி மேற்குத் தெரு, உடுவில்).

48 பக்கம், புகைப்படங்கள், சித்திரங்கள், விலை: ரூபா 95.00, அளவு: 21×14.5 சமீ.

இளம் தலைமுறையினரின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவரும் நோக்கில் வெளியிடப்படும் இளையோர் சஞ்சிகையின் முதலாவது இதழ். இவ்விதழில் சமூகம்-அது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் (கி.துவாரகன், யாழ். யூனியன் கல்லூரி), முயற்சி திருவினையாக்கும் – சிறுகதை (வி.றம்மியா), இது தொழில் (நுட்ப) மயக்கமா?-கவிதை (டிலக்ஷன் கிருஷ்ணானந்தா, கிளிநொச்சி மகா வித்தியாலயம்), உருள் பந்து விளையாட்டு (துலக்ஷனா-சோபிகா, கிளிநொச்சி), பாகுபாடற்ற கல்வியே சமூகத்தின் தேவை (மேரி ஆன் பிறித்திகா பார்த்தீபன், SOS சிறுவர் கிராமம், யாழ்ப்பாணம்), தொழில்நுட்பம் ஆக்கமும் அழிவும் (ய.சாஹித்யா, வவுனியா விநாயகர் வித்தியாலயம்), கல்வியின் அவசியம் (க.டோஜிகா, சாவகச்சேரி இந்துக் கல்லூரி), இரு முகங்கள் கொண்ட தொழில்நுட்ப வளர்ச்சி (எம்.ஆர்.பாதில் அஹமட், புத்தளம் சாஹிரா தேசியக் கல்லூரி), எனது பாடசாலை கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம் (ம.சிவராம், கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயம்), சுவாமி விபுலானந்தர் (நா.தர்மினி, கிளிநொச்சி), கல்வி (மாத்தளை ஜெ.குகனேஸ்வரி), தொழில்நுட்பம் (க.பாருத்தியா), கல்வியின் சிறப்பு (ச.சங்கவி, யாழ். இந்து மகளிர் கல்லூரி), நட்பு (கி.ஜென்சிகா), நுளம்பும் சிங்கமும் (கிளிநொச்சி ம.மதுரியா), கிளைக்குத் திரும்பிய மலர் (சிந்தியா, தஞ்சாவூர்), கல்வியே செல்வம் (சி.தனுஷிகா), மூத்த நாடகக் கலைஞரும் பாடகியுமான திருமதி சிவபாதம் பார்வதி அவர்களுடனான நேர்காணல் (செல்வி சி.சிவலோஜி), லிற்றில் நூலகத் திறப்பு விழா (தேசம் நெற்), நூல் விமர்சனம்-மூன்று துப்பாக்கி வீரர்கள் (சாகித்தியன்), ஆசானின் பிரிவு (ர.றேனுசன்), குயவனின் படைப்பு (கி.இவாஞ்சலின்), அகாலத்துக்காய் அஞ்சுதல் (அனுதகி, கிளிநொச்சி) ஆகிய இளையோரின் படைப்பாக்கங்கள்  இடம்பெற்றுள்ளன. இவ்விதழின் ஆசிரியர் குழுவில்  எஸ். எஸ்.டர்சன், எஸ்.சுகிர்தன், ப.நவீசன், தி.கன்சிகா, ஜெ.கலைநிலா ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

ஏனைய பதிவுகள்