16017 வட மாகாண சஞ்சிகைகள் ஓர் அறிமுகம்.

க.பரணீதரன். பருத்தித்துறை: ஜீவநதி வெளியீடு, கலையகம், சாமணந்தறை ஆலடிப் பிள்ளையார் வீதி, அல்வாய் வடமேற்கு, அல்வாய், 1வது பதிப்பு, மார்கழி 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

iv, 64 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 22×14 சமீ., ISBN: 978-624-5881-35-2.

இலங்கையின் வட மாகாணத்தில் வெளிவந்த சிறுசஞ்சிகைகள் பற்றிய விபரத் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இவை ஆன்மீக இதழ்கள், கல்வி இதழ்கள், மருத்துவ இதழ்கள், அரங்க இதழ்கள், சிறுவர் இதழ்கள், உளவியல் இதழ்கள், பெண்ணிய இதழ்கள், பல்சுவை இதழ்கள், அறிவியல் இதழ்கள், விளையாட்டு இதழ்கள், தொழில்சார் இதழ்கள், ஓவிய இதழ்கள், விழிப்புணர்வு இதழ்கள், சமூக அரசியல் இதழ்கள், வணிக இதழ்கள், ஆய்வு இதழ்கள், சினிமா இதழ்கள், இயக்க இதழ்கள், கலை இலக்கிய இதழ்கள், பல்கலைக்கழக இதழ்கள், பிரதேச இதழ்கள், ஏனைய இதழ்கள் என 22 வகுப்புகளாகப் பிரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏனைய இதழ்கள் என்ற பிரிவில் காலாண்டுச் சஞ்சிகை உருவில் மூன்று இதழ்கள் மட்டும் வெளிவந்த ‘நூல்தேட்டம்” பற்றிய குறிப்பு பதியப்பட்டுள்ளது. 2002 முதல் நூல்தேட்டம் தொகுதியொன்றில் 1000 நூல்கள் பற்றிய குறிப்புடன் பல்தொகுதி நூலாக வெளியிடத் தலைப்பட்டது. இன்று உங்கள் கைகளில் உள்ளது அதன் 17ஆவது தொகுதியாகும்.

ஏனைய பதிவுகள்