16018 வழித்தடம்-1.

சிராஜ் மஷ்ஹீர் (பிரதம ஆசிரியர்), கருணாகரன், மல்லியப்பூ சந்தி திலகர், அம்ரிதா ஏயெம் (இணை ஆசிரியர்கள்). அக்கரைப்பற்று -2: வழித்தடம்- புத்தாக்க சிந்தனைக் கூடம், 117, நகர பள்ளிவாசல் வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 2021. (அக்கரைப்பற்று: நியூ செலெக்ஷன் ஓப்செட் பிரின்டர்ஸ், C.E.B. மின்சார நிலைய வீதி).

112 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 22×14 சமீ.

புத்தாக்க சிந்தனைக் கூடம் என்ற அமைப்பினர் வெளியிட்டுள்ள இவ்விதழில் ‘வாசிய” யாருக்கு (மல்லியப்பூ சந்தி திலகர்- ஆசிரியர் தலையங்கம்), வழித்தடம் எங்கள் வழிப்படம் (சிராஜ் மஷ்ஹீர்), ஒன்லைன் கல்விப் பிரச்சினைகள் (அ.மார்க்ஸ்), எமிலி டிகின்ஸனின் கவிதை, நேர்காணல்-எம்.ஏ.நுஃமான், மீள்வாசிப்பு-நந்தினி சேவியர், களிமண்ணின் கிளர்ச்சி (அஹ்மத் மதர்), மூளைக்குமுண்டோ சிலிக்கா சிப் (ரும்மான்), ஜனநியமு: கமல் பெரேரா, அஞ்சலி: சுனில் பெரேரா, காலநிலை மாற்றம் (அஸ்லம் சஜா), வாழ்வியல் கோலங்கள்: ஒளிப்படங்கள் (அப்துல் ஹமீத்), ஆளுமை: கே.எஸ்.சிவகுமாரன் (மு.நித்தியானந்தன்), புலனாகாவெளி: அனார் கவிதைகள், சிறுகதை: அம்மா (எஸ்.பாயிஸா அலி), நிறமிழக்கும் வானம் (மின்ஹா), வாசிப்பதும் ஒருவகை தியானம் தான் (றியாஸ் குரானா), நாஸ்தென்காவின் கண்களில் பனி பொழிகிறது (டணிஸ்கரன்), இலங்கையில் ஜனநாயகம் (மல்லியப்புசந்தி திலகர்), சிங்களத்தில் முஸ்லிம் சிறுகதைகள் (திக்குவல்லை கமால்), பண்பாட்டு வெளியில் மிதவை சந்தை (முஹம்மத் ரியாஸ்), பறவையின் உடையா நிழல் (ஜமீல்), எஸ்.நளீமின் ஓவியங்கள், விதைப் பந்துகள் பசுமைப் பந்துகளாக மாறிய கதை (அம்ரிதா ஏயெம்), பன்மைத்துவத்தை நோக்கிய வழித்தடத்தில் (கருணாகரன்), இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே (சி.வி.வேலுப்பிள்ளை) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Furious Upset Monkey Mini Slot

Content Best Gambling enterprises That offer Nextgen Playing Game: Last Review of The brand new Furious Angry Monkey Gambling establishment Slot Finest six Novomatic Slots

16425 நல்லதொரு பயணம் : சிறுவர் கதைகள்.

இக்பால் அலி. கண்டி: மக்கள் கலை இலக்கிய ஒன்றியம், 18/13, பூரணவத்தை, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2002. (கண்டி: பிரின்ட் எக்ஸ் கிராப்பிக்ஸ்). 28 பக்கம், விலை: ரூபா 35.00, அளவு: 18×12 சமீ.,