16019 அகிலம்: வருடாந்தச் சிறப்பு மலர் (தெளிவத்தை ஜோசப் சிறப்பிதழ்): 2015.

கே.வி. இராமசாமி (ஆசிரியர்). கண்டி: அகிலம் பப்ளிக்கேஷன்ஸ், 308, டி.எஸ்.சேனநாயக்க வீதி, 1வது பதிப்பு, 2015. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48 B, புளுமெண்டால் வீதி).

xvi, 196 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 500., அளவு: 24.5×17.5 சமீ.

மலையகத்தில், கண்டியிலிருந்து வெளிவரும் அகிலம்: அறிவியல் சஞ்சிகையின் வருடாந்தச் சிறப்பு மலராக 24.10.2015 அன்று மலையகத் தலைநகர் கண்டியில் ‘அகிலம்” வெளியிடப்பட்டுள்ளது. அறிவியல், கலை, இலக்கியம் சார்ந்த 51 கட்டுரைகளை இவ்விதழ் உள்ளடக்கியுள்ளது. இலங்கைத் தமிழ் அறிஞர்கள் பலரின் துறைசார் ஆக்கங்களாக இவை அமைந்துள்ளன. பெரும்பாலும் கலை, நுண்கலை தொடர்பான படைப்புகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. ‘தெளிவத்தை ஜோசப்” பற்றி மயில்வாகனம் திலகராஜ், மு.சிவலிங்கம், சபா ஜெயராசா, பதுளை சேனாதிராஜா, இரா.சடகோபன், மா.செ.மூக்கையா ஆகியோர் தத்தம் மனப்பதிவுகளை வழங்கியுள்ளனர். மேலும் இவ்விதழில் பெண்ணியம் பேசுவோம் (மலர் சின்னையா), மறக்க முடியாத மனிதர்கள்: இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் (தெளிவத்தை ஜோசப்), இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைப்பதில் இலங்கைப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு (துரை. மனோகரன்), தேடல்களை அடியொற்றிய அனுபூதி உளவியல் (சபா.ஜெயராசா), மலையகப் பல்கலைக்கழகம் (சோ.சந்திரசேகரன்), மலையகப் பல்கலைக்கழகம் தேவையும் நியாயப்பாடுகளும் (சிவம் பிரபாகரன்), மலையகத் தமிழ் மக்களுக்கென தனியானதொரு பல்கலைக்கழகமும் அம்மக்களின் சமூக மேம்பாடும் (மு.சின்னத்தம்பி), தமிழ் இலக்கியத் திறனாய்வில் ஒரு பார்வை (க.நாகேஸ்வரன்), ஈழத்து முன்னோடிக் கவிஞைகள் (செ.யோகராஜா), மார்ட்டின் விக்கிரமசிங்க (கே.எஸ்.சிவகுமாரன்), எல்லாம் குருமயம் (பொன் பூபாலன்), கலையாத கல்வி (தெ.ஈஸ்வரன்), இலக்கை நோக்கிய படிப்பும் பரீட்சைகளும் (உடுவை எஸ்.தில்லை நடராஜா), மலையகத் தமிழரும் உள்ளூராட்சி தேர்தல் முறை மாற்றங்களும் (பி.பி.தேவராஜ்), இந்திய வம்சாவளித் தமிழர் (யசோதரா கதிர்காமத்தம்பி), 21ஆம் நூற்றாண்டு கல்வி கற்றலும் கற்பித்தலும் (தை.தனராஜ்), அரச பொது நிர்வாகமும் பெருந்தோட்ட மக்களும் (மு.சிவலிங்கம்), சாரல்நாடன்-நம் காலத்து மலையக சுடர்மணி (சு.முரளிதரன்), தமிழ் இலக்கிய உலகில் பேரா. க. கணபதிப்பிள்ளை (எஸ். தேவகுமாரி), உடப்பும் சித்திரைச் செவ்வாய் ஆற்றுகைச் சடங்கும் (யாழ். தர்மினி பத்மநாதன்), பெருந்தோட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் (ஏ.எஸ்.சந்திரபோஸ்), திருடர்களின் தேசம் (இரா. சடகோபன்), மலையக சமூகத்தின் தற்போதைய எதிர்பார்க்கைகள் (எம்.வாமதேவன்), திருக்குறள்: சுடச்சுட ஒளிரும் தங்கம் (மொழிவரதன்), முற்போக்கு இலக்கிய முன்னோடி கே.கணேஷ் (லெனின் மதிவானம்), புதிதாய் பயில்வோம் ஆத்திசூடி (பிரேம்ராஜ்), பரீட்சைகளை எதிர்கொள்ளலில் அறிகைமுறைமைகள் (கோகிலா மகேந்திரன்), இரத்ததானம் உன்னத யாகம் (கே.ஜெயகுணசீலன்), சர்க்கரை வியாதி (க.பரநிருபசிங்கம்), ஈழத்து நவீன தமிழ்க் கவிதை வளர்ச்சியில் மஹாகவி (இரா.லோஹிதா), தொடர்ந்து வாழும் மூட நம்பிக்கைகள் (எஸ்.பத்மநாதன்), மனித வள அபிவிருத்தியும் மானிட அபிவிருத்தி குறிகாட்டியும் (மா.செ.மூக்கையா), மலையக தொழிற்சங்க அரசியல் முன்னோடிகள் (மங்களேஸ்வரி வேலுசாமி), பெருந்தோட்டத் துறைசார்  இந்திய வம்சாவளியினரின் கல்வி வரலாற்றுடன் தொடர்பான சமூக அரசியல் சட்டப் பின்னணி (ப.ஆறுமுகம்), இலக்கியக் காவலர் துரை விஸ்வநாதன் (துரைவி), மலையகத் தமிழ் இலக்கிய ஆய்வு முயற்சிகளில் பேராசிரியர் க.அருணாசலம் (சர்மிளாதேவி துரைசிங்கம்), நினைவில் நிற்கும் நிகழாட்டங்கள் (பசறையூர் க.வேலாயுதம்), விடியலே வா (கந்தையா கணேஷமூர்த்தி), கல்விச் சமூகவியலும் மாணவர்களைச் சமூக இயல்பினர்களாக்குதலில் அதன் முக்கியத்துவம் (சி.மனோகரன்), மூங்கில் காடு (ந.பார்த்திபன்), தமிழா நீ தலைநிமிர்ந்து வாழ் (கே.குலசேகரன்), பிள்ளைகள் சமூகத்தின் பிரதிபலிப்புகள் (துரைசாமி நடராஜா), மலையக மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த தமிழ்த் திரைப்படங்கள் (பாலா சங்குப்பிள்ளை) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்