காஞ்சனமாலா உதயகுமாரன் (இதழாசிரியர்). புத்தூர்: நூலக அபிவிருத்திக் குழு, பொது நூலகம், வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2019. (யாழ்ப்பாணம்: சுடர்நிலவு கிராப்பிக்ஸ், இணுவில் கிழக்கு, இணுவில்).
xx, 140 பக்கம், புகைப்படத் தகடுகள், விளக்கப்படங்கள், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ., ISSN: 2714-1578.
வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்த முன்னெடுக்கப்படுகின்ற வாசிப்பு மாதச் செயற்பாடுகளில் இந்த சஞ்சிகை வெளியீடானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்களின் ஆக்கங்களுடன் அதிகளவான மக்களை நிர்வகிக்கும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை (மா.ஞானலிங்கம்), மீட்சி-சிறுகதை (திருமதி ஜெ.நவலோகநாதன்), குழந்தைகளூடாக வாசிப்பை வளர்ப்போம் (காஞ்சனமாலா உதயகுமாரன்), அதிகாரம் 40 (பி.குபீந்தினி), கனவு மெய்ப்பட வேண்டும்- சிறுகதை (சிவகுருநாதன் ஸ்ரீரங்கன்), பெண்ணியம் கூறும் யோகா (சி.செந்தில்குகன்), மத்தியஸ்த சபைகள் (க.நா.சண்முகரத்தினம்), ஒரு பதவியிலுள்ளவர் தீர்மானமெடுக்கும் திறமையும் பாங்கும் (க.தியாகராஜா), காலனித்துவத்திலிருந்து இன்றுவரையான நிர்வாகக் கட்டமைப்பு மாற்றம்: வலிகாமம் கிழக்குப் பகுதி (இரத்தினசிங்கம் கோகுலன்), கற்றலும் கல்வியும் காலத்தின் இரு கண்களே (புதுவை ஆனந்தன்), இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் சமயங்களின் பங்களிப்பு (திருமதி சிந்துபிரியா நிஷாந்தன்), நிலாவரை வற்றா நீர்நிலையும் நவசைலேஸ்வரமும் (ஞான ஆதவன்), பொது நூலகம் குறைபாடுகளும் தீர்வுகளும் (திருமதி இராஜேஸ்வரி கருணானந்தராஜா), வீட்டுக்கொரு நூலகம் விருத்திபெறச் சிலவிதந்துரைகள் (ஸ்ரீகாந்தலட்சுமி அருளானந்தம்), நல்லூர் இராசதானியின் நினைவுச் சின்னமாக கோப்பாயில் அமைந்திருந்த சங்கிலியன் கோட்டை (செல்வி சசிதா குமாரதேவன்), வலி கிழக்கின் சூத்திரக் கிணறுகள் (கு.எழிலன்) ஆகிய ஆக்கங்களும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.