ரமணி ஜெயபாலன் (தொகுப்பாசிரியர்). களுவாஞ்சிக்குடி: வள்ளுவர் வாசகர் வட்டம், பொது நூலகம், மண்முனை தெற்கு எருவில் பற்று (ம.தெ.எ.ப.) பிரதேச சபை, 1வது பதிப்பு, 2018. (காத்தான்குடி-2: கபீர் பப்ளிக்கேஷனஸ், இல. 26/2, எஸ்.பி. ஒழுங்கை).
xii, 13-148 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×16 சமீ.
ஒக்டோபர் 2018இல் இலங்கையில் இடம்பெறும் தேசிய வாசிப்பு மாத நிகழ்வுத்திட்டத்தின் ஒரு பகுதியாக களுவாஞ்சிக்குடி பொது நூலகம் இச்சஞ்சிகையின் முதலாவது பிரசுரத்தினை வெளியிட்டுள்ளது. களுவாஞ்சிக்குடி பொது நூலக வரலாறு, தமிழ்த்தாய் வாழ்த்தும் தமிழ்மொழி வாழ்த்தும், களுவாஞ்சிக்குடி பொது நூலகமும் நூலகப் பொறுப்பாளரும் ஓர் அனுபவ பதிவு, களுவாஞ்சிக்குடி பொது நூலக தன்னியக்கமாக்கலும் அதன் இலத்திரனியல் சேவைகளும், காணியுடன் தொடர்புடைய சில பிரச்சினைகள், நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், மக்களின் கழிவு முகாமைத்துவ சீர்கேட்டின் கசப்பான உண்மைகள், வாசிப்பு, மனிதன் மனிதனாக வாழவேண்டும், ஆசிரியர் வாண்மையை வளமாக்குவதில் முக்கிய பங்குவகிப்பது நூலகம், நூலகம்மா (குறுங்கதை), வாசகன் திலீபன், நிம்மதி, நதி என்னும் முதியவர், அன்று எரிந்து சிதைந்து அழிந்து காட்சி தந்த நூலகம் இன்று புகழ்பெற்று நற்சேவை ஆற்றி வருகிறது, களுவாஞ்சிக்குடியில் கமழும் மண்வாசனை, தாய் மண்ணே என் வணக்கம், அம்மா, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வு, நாட்டார் பாடல்களின் பேச்சு வழக்கு மண்வளச் சொற்களின் இனிமை, சத்தியவான்-சாவித்திரி கூத்து, அவசர சேவை தொலைபேசி இலக்கங்கள், திருக்குறள், விளையாட்டு, தமிழர் எவ்வளவு அறிவாளிகள் தெரியுமா?, தூயி தசாம்சப் பகுப்புத் திட்டம், பல நோய் தீர்க்கும் ஒரு மருந்து ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.