ஆசிரிய பீடம். யாழ்ப்பாணம்: ஊடகக் கற்கைகள் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2020. (யாழ்ப்பாணம்: நியூ எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
xiv, 136 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×17.5 சமீ.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் துறையின் இரண்டாம் வருட மாணவர்களின் ‘அறிக்கையிடல் நுட்பங்களும் திறன்களும்”, ‘செம்மையாக்கல் எண்ணக்கருக்களும் முறைமையும்” ஆகிய பாடப்பரப்புகளின் வெளிக்கொணர்தலாக மாணவர்களின் தேர்ந்த சுவைமிகு ஆக்கங்களின் தொகுப்பாக இவ்விதழ் வெளிவந்துள்ளது. ஏற்கெனவே இம்மாணவர்கள் பல்கலையன், பதிவு, அடையாளம், விசைச் சிறகுகள், மைத்தூறல், கனலி-2018, கனலி-2019 என்ற நூல்வரிசையில் இம்மலரும் தரமான ஆக்கங்களுடன் மணம்பரப்பியிருக்கின்றது. இம்மலரில், பண்டாரவன்னியன் ஓட்டுத் தொழிற்சாலை: மீண்டெழுமா வன்னியின் அடையாளம்? (நா.சாருமதி), இயற்கை முறையில் விஷக்கடி வைத்தியம்: மண்டூர் வைத்தியர் பூ செல்வராசாவுடன் ஓர் சந்திப்பு (பூ.ஜெயச்சந்திரன்), சிவபூமி அரும்பொருட் காட்சியகம் யாழ்ப்பாணத்தின் பொக்கிஷம் (பி.ஸ்ரீவித்யா), வடக்கில் அதிகரித்து வரும் சிறுவர் குற்றச் செயல்கள் (சு.கிசோபனா), வட்டுவாகல் கிராமியப் பாரம்பரியத்தின் விளைநிலம்: கரகமும் கும்மியும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படும் விந்தை (இ.தனுஷியா), மலையகத்தில் ஓர் ஆணழகன்: மாதவன் ராஜகுமாரன் நேர்காணல் (மை.டிலான்), காலத்தால் மறக்கப்பட்டு வரும் மந்திரிமனை (ம.லர்ஷிக்கா), யாழ்ப்பாணத்தில் இஞ்சி உற்பத்தி (ந.ரிலக்ஷனா), நெல்லைச் சேமிக்கும் ‘குதிர்” அல்லது ‘கொம்பறை”: அருகிப்போன வன்னியின் வளம் (ஜெ.கல்கி), இன்றைய இளைய சமூகம் ’சே” மீது கொண்டிருக்கும் புரிதல் (க.அரவிந்தன்), யாழ்ப்பாணத்தில் பாய் பின்னலின் மீளெழுகை: ஓர்மத்திற்கு றொபின்சன் ஒரு முன்னுதாரணம் (நி.கஜேந்தினி), கழுதைகளுக்கான சிகிச்சை இல்லம்: மன்னாரில் உருவாகும் மனித நேயம் (செ.மேரி ரெபெக்கா), தமிழ்ப் பெண்களின் காதுகளை அலங்கரித்த பாம்படம்: தமிழர் பாரம்பரியத்தின் மற்றுமொரு அடையாளம் (ப.துசியந்தி), அர்ச்சுனன் தபசு: மலையகத்தின் அடையாளம் (யே.பிரதீபன்), யாழ்ப்பாணத்தில் மாட்டுவண்டில் சவாரி: சோபை இழந்துவிடாத மரபின் தொடர்ச்சி (பி. துலக்ஷா), எமது உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்;: சமூக செயற்பாட்டாளரும் Jaffna Transgender Network இன் தாபகருமான ஏஞ்சல் குயின்ரஸ் உடனான நேர்காணல் (ப.துசியந்தி), என்ன தவம் செய்தனை? புறந்தள்ளப்படும் யாழ்.கிராமியப் பாடசாலைகள் (பி.ஸ்ரீவித்தியா), மீளவும் கிடைக்குமா சிறார்களுக்குச் சுதந்திரம்? (த.றெஜினா), யாழ். மண்ணில் இயற்கை விவசாயம்: நம்பிக்கை தரும் முயற்சிகள் ஆரம்பம் (தே.கவிநயா), இயற்கையின் பொக்கிஷமான கண்டல் தாவரங்கள்: மிருசுவில் கண்டல் காடுகள் நோக்கி ஒரு பயணம் (பா.நிர்மலா), யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் விவாகரத்துக்கள் (அ.ரோகிணி), பளபள கத்தரிக்காயும் சூத்தைக் கத்தரிக்காயும்: ஓர் மார்க்கெட் சந்திப்பு (இ.அனுஷி), தற்கொலைகள் தீர்வல்ல: தவறான முடிவுக்குப் போவதும் தவறே (அ.றுக்சி வினோதா), சவால்கள் நிறைந்த இரவுநேரப் பேருந்துப் பயணம்: பெண்களுக்குப் பாதுகாப்பு உள்ளதா? (கி.செல்வி), சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.ராதேயன் அவர்களின் ஊடகத்துறைசார் அனுபவப் பகிர்வு (செ.நிரஞ்சனா, பா.நிர்மலா), கட்டுக்கரைக்குளம்: தொன்மைக்கு ஒரு சான்று (த.சஞ்சீப்), கல்வீட்டின் காவலாளியோ?: மனப்பகிர்வு (இ.அனுஷி), போதையால் மாறும் பாதை: தடுக்கத் திருவுளம் கொள்வோம் (உ.நிந்தனா), மலையகம் மாறி வருகிறதா?: தங்குநிலை அகலும் அதிசயம் (பா.கனகேஸ்வரி), தமிழர் வாழ்வில் விருந்தோம்பல் (பி.துலக்ஷா), சமூக வலைத்தளங்கள் வரமா? சாபமா? (எஸ்.எம்.நிப்லான்), பத்திரிகைகள் எப்போதும் நிலைத்திருக்கும் பதிவுகளைத் தருபவை (கி.தீபாணி), தேசிய தொழில் தகைமைச் சான்றிதழ் ஒரு வரம் (வி.டதுர்சினி), சிதைவுகள் கதை சொல்லும் அல்லிராணிக் கோட்டை (அ.ஷர்மி), மறைந்து போகும் தமிழர் வாழ்வியல் மரபுகள் (ச.சதங்கனி), உச்சமாகும் மணல் அகழ்வு (ப.சுஜீவன்), முப்பது நாட்களில் ஒரு நாளா? (இ.அனுஷி) ஆகிய படைப்பாக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.