16030 சுதேசிய சமூக உருவாக்கம்: பத்திரிகைகளின் பங்களிப்பு குறித்த ஓர் உசாவல்.

எம்.ஏ.எம்.ரமீஸ். யாழ்ப்பாணம்: சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுக் குழு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2022. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், திருநெல்வேலி).

42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×15.5 சமீ.

10.10.2022 அன்று கைலாசபதி கலையரங்கில் ஆற்றப்பட்ட சீமாட்டி லீலாவதி இராமநாதன் நினைவுப் பேருரை இதுவாகும். றமீஸ் அப்துல்லா (1969) அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு இளங்கலைமாணிப் பட்டத்தைப் பெற்று அப்பல்கலைக்கழகத்திலேயே முதுதத்துவமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார். மேலும், ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பொதுசனத் தொடர்பாடல் துறையில் கலாநிதிப் பட்ட ஆய்வினை மேற்கொண்டார். இலங்கை, தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறையின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றிய இவர், தற்போது தமிழ்ப் பேராசிரியராகி, மொழித்துறை தவிசுப் பேராசிரியராகவும் கடமையாற்றி வருகிறார்.

ஏனைய பதிவுகள்