16032 அங்குமிங்குமாய்.

அ.யேசுராசா. யாழ்ப்பாணம்: அலை வெளியீடு, இல. 1, ஓடைக்கரை வீதி, குருநகர், 1வது பதிப்பு, ஒக்டோபர் 2021. (பருத்தித்துறை: பரணீ அச்சகம், நெல்லியடி).

x, 402 பக்கம், விலை: ரூபா 1000., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-624-98514-0-5.

திரு.அ.யேசுராசாவின் 75ஆவது அகவை நிறைவினை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட நூல். கலை-இலக்கியம், மொழி, பயணக்குறிப்பு, ஊடகம் பற்றிய கட்டுரைகளும் பத்தி எழுத்துகளுமாக 75 ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. சென் ஜோன்ஸ் கல்லூரி நூலக தினம், புத்தகத் திருவிழாவும் தமிழகப் பயணமும், மொழிபெயர்ப்பும் கவிதையும், ஒரு கவிதை தான், நானும் எனது படைப்புலகமும், வெளிவராது போய்விட்ட ஒரு நூலுக்கான முன்னுரை, எழுத்துக் கலைஞன் எம்.எல்.எம்.மன்சூரின் சிறுகதைகள், அங்குமிங்குமாய் இணையுங் கதைகள், போலி யதார்த்தக் கதைகள், ஒரே குடிசைகளைச் சேர்ந்தவர்கள், அ.செ.முருகானந்தனின் ‘மனித மாடு” சிறுகதை விமர்சனம், தமிழைப் பேணுவது யாரின் கடமை, எங்கள் மண்- எங்கள் எழுத்தாளர்- எங்கள் நூல்கள், ஈழத்து நூல்களை ஆதரித்தல், பயனுள்ள பொழுதுபோக்காயும் அறிவைத் திரட்டுவதாயும், பல்கலைக்கழகத்தில் இரு நாடகங்கள், மக்கள் களரி நாடக விழா யாழ்ப்பாணத்தில், ஹிரு நோநகே, இன்னொரு முகம், ஓவியர் மு.கனகசபை, மூன்று கண்காட்சிகள், பயணம், சு.ரா.: உலகத் தமிழர் உறவு, நன்றியுடன் நினைவுகூர்தல், நுஃமான்: சில மனப்பதிவுகள், எஸ்.வி.ஆர். என்னும் ஆளுமை, முரண்பட்டும் உடன்பட்டும் மு.பொ. தொடர்பாக, இழப்புணர்வும் நன்றியிடலும், சு.ரா.: சில நினைவுகள், நினைவுக் குறிப்புகள், என் நினைவில் கி.பி. பெர்மினஸ், கொழும்பில் முத்தமிழ் விழா, தேசிய ஒருமைப்பாடு மாநாடு ஒரு கண்ணோட்டம், பாரதியின் சிரிப்பு பயத்தைத் தருகிறது, ஒரே கேள்வி, தினக்குரலின் கேள்விக்குப் பதில், புஷ்பராஜனைப் பற்றி, சந்திரா தனபாலசிங்கம், ‘உதிரிகளும்” பின்னுரை, கவனத்தை ஈர்க்கும் முயற்சி, பிழை பிழையாய்-பிழை சரியாய், செவ்விதாக்கம் பற்றி, தட்டச்சுப் பிரதியில் படித்த நாராயணபுரம் நாவல், நினைவழியா வடுக்கள், தமிழ் ஊடகங்கள் பற்றிச் சில அவதானங்கள், யாழ் இலக்கியச் சூழல் தொட்டு, கண்டுங் காணாமல், தளம், ஜொலிக்கும் விருதுகள்: குளறுபடிகளும் இருட்டடிப்புகளும், ஜனரஞ்சகம் சக வியாபார மனப்பாங்கு சமன் செங்கை ஆழியான், பயணியின் குறிப்புகள் (6 தொடர்), உள்வெளி (8 தொடர்), சடங்கு, சிங்களத்திலும் தமிழிலும் மொழியாக்க நூல்கள், புத்தகச் சுத்திகரிப்பு, புலவர் வேல்மாறன், புனைவும் உண்மையும், யதார்த்தமும் பொய்யான காலப் பதிவும், யாழ். இசை விழா, ஜேர்மன் கலாசார நிலையம் – சர்வதேச கத்தோலிக்க—/சிங்கப்பூரில் சந்திப்பு, கி.ராஜநாராயணனுக்கு அஞ்சலி ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்