அஷ்ரப் சிஹாப்தீன். வத்தளை: யாத்ரா வெளியீடு, 37, ஸ்ரீ சித்தார்த்த மாவத்தை, தன்கனத்தை வீதி, மாபோல, 1வது பதிப்பு, ஜனவரி 2019. (கொழும்பு 13: தேவி பிரின்டர்ஸ், 41, Brass Founder Street).
x, 90 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12.5 சமீ., ISBN: 978-955-8448-14-4.
‘தீர்க்க வர்ணம்” நூலைத் தொடர்ந்து வெளிவரும் ஆசிரியரின் இரண்டாவது பத்தி எழுத்துத் தொகுப்பு. ‘மீள்பார்வை” பத்திரிகையில் இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த 31 பத்திகளிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பத்திகளும் பத்திரிகையில் வெளிவராத பத்தியொன்றுமாக 26 பத்தி எழுத்துக்களை இந்நூல் கொண்டுள்ளது. 2014 முதல் 2015 வரையில் இவை எழுதப்பட்டுள்ளன. முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்தியே பெரும்பாலான பத்திகள் எழுதப்பட்டுள்ளன. எழுத்துச் சேவை, மொழியாள்கை, மன்னரே முதல்வர், ஒரு நாடகமன்றோ நடக்குது, கோலத்தைச் சிதைக்கும் கோடுகள், வற்றாத கடலில் ஓயாத அலைகள், தெற்கே உதித்த சூரியன், கண்ணுக்குத் தெரியாத கபட வலை, முகத்திரண்டு புண்ணுடையார், நுணலும் தன் வாயால் கெடும், மூக்குகளால் சிந்திப்பவர்கள், குகைவாசிகள், நடத்தை காட்டும் நல்வழி, நீ சொன்னால் காவியம், அவனன்றி அணுவும் அசையாது, அடைந்துகொள்ளப்படாத ஆயுதம், எல்லைக்குள் எட்டப்படா இடங்கள், மூன்று காட்சிகள், வேர்கள் இறக்கும் விதம், அவளுக்கும் அழுகை என்று பெயர், நோன்புக் குழந்தைகள், அஸ்ஸலாமு அலைக்கும், ஆர்ப்பரிக்கும் ஆசைகள், ஹஜ்-காசாகி நிற்கும் கடமை, உன்புகழ் கூறாத சொல்லறியேன், அனல் ஹக் ஆகிய தலைப்புகளில் இப்பத்தி எழுத்துக்கள் எழுதப்பட்டுள்ளன.