12902 – சபாரத்தினமெனும் திருவாசகப் பேரூற்று.

ஆழ்கடலான் (இயற்பெயர்: முருக வே.பரமநாதன்). தெகிவளை: திரு.த.துரைராசா, ‘திருவாசகம்’, 11/6, றூபன் பீரிஸ் மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, டிசம்பர் 1998. (கொழும்பு 13: லக்ஷ்மி அச்சகம், 195, ஆட்டுப்பட்டித் தெரு).

(6), 116 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5 x 14 சமீ.

கதம்பநதிப் பாங்கர், திருவாசகம்-குட்டித் திருவாசகம், ஆன்மீக வள்ளல், திருவாசக மடம், நிதி-நீதி-சோதி, நன்றி நாகரீகம், தேர்ந்து பாருங்கள், சிங்கை நகரில், ஆனந்தாச்சிரமம், விதானையார் ஒழுங்கை, தேன் கலசம், சொல்லுகைக்கு இல்லாதது, வந்தவேலையைப் பார், சபாரத்தினப் பேரூற்று, தேவகானமே ஜீவகானம், கருணை வெள்ளம், எப்போதும் குரு சரணம் நினைவாய் நெஞ்சே, நிறைகுடம், திருவாசகம் தந்த பலாபலன்கள் ஆகிய 19 தலைப்புகளின்கீழ் திருவாசகம் சுவாமிகள் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரம் திருவாசகம் ஸ்ரீமத் சபாரத்தினம் சுவாமிகளின் வாழ்வும் பணிகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 27452).

ஏனைய பதிவுகள்