வீ.சின்னத்தம்பி. வட்டுக்கோட்டை: வீ. சின்னத்தம்பி, வட்டு மேற்கு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1993. (யாழ்ப்பாணம்: அருண் பிறின்டேர்ஸ்).
60 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 35., அளவு: 20 x 14 சமீ.
இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், சிறந்த கல்விச் சிந்தனையாளருமாகிய தோழர் மு.கார்த்திகேசன் ( 25.6.1919-10.9.1977) அவர்களது வாழ்வும் பணிகளும் இந்நூலில் பேசப்பட்டுள்ளன. மிகவும் இறுக்கமான சமூகக் கட்டுமானங்களைக் கொண்ட வடபுலத்தில் கம்யுனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்து அதன் முழுநேரப் பொறுப்பாளராக இருந்துகொண்டு, ஆசிரியராகவுமிருந்து கடுமையான பணிகளைச் செய்தவர் மு.கார்த்திகேசன். மக்களின் ஒடுக்கு முறைகளை உடைத்தெறிய இடைவிடாத வகுப்புகளை எடுத்தவர். வடபுலத்தில் மூலை முடுக்கெல்லாம் அடக்கப் பட்ட சமுதாயம் விழித்தெழக் கம்யுனிஸ்ட் கட்சிக் கிளைகளைத் திறந்து பல பணிகளைச் செய்தவர். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 98925).
மேலும் பார்க்க: 13A06, 12732.