12913 – செயலாளர் செல்லச்சாமி: வாழ்க்கை வரலாறு.

சி.அழகுப்பிள்ளை. மாத்தளை: கவிஞர் சி. அழகுப்பிள்ளை, எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டம், 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (கொழும்பு 12: சுதந்திரன் அச்சகம்).

8 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21 x 14.5 சமீ.

இலங்கை அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இலங்கை அமைச்சருமான எம்.எஸ்.செல்லச்சாமி (முத்து சங்கரலிங்கம் செல்லச்சாமி) அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் சுருங்கக் கூறப்பட்டுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் தலைமையில் தன்னை தொழிற்சங்கத் துறையில் ஈடுபடுத்திக்கொண்ட இவர், தொழிலாளர் காங்கிரசில் 35 ஆண்டு காலமாக பொதுக் காரியதரிசியாக சேவை புரிந்தார். 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளராக மத்திய கொழும்பில் முதன் முதலில் போட்டியிட்டு 24,969 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். பின்னர் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட விகிதாசார தேர்தல் முறையில் கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபைத் தேர்தலில் 1981 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கொழும்பு மாவட்ட அபிவிருத்தி சபையில் போக்குவரத்து அமைச்சராக நியமனம் பெற்றார். 1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் சார்பில் கொழும்பு மாவட்டத் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு 36,820 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அன்றைய அரசாங்கத்தில் சிறு கைத்தொழில்துறை அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்றார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இரண்டாகப் பிளவு பட்டபோது, செல்லச்சாமி இலங்கை தேசிய தொழிலாளர் காங்கிரஸ் என்ற தொழிற்சங்கத்தைத் தொடங்கினார். 1994 பொதுத்தேர்தலில் சந்திரிக்கா குமாரதுங்கவின் பொது சன ஐக்கிய முன்னணியின் சார்பில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 15,000 வாக்குகளைப் பெற்றும் தோல்வியடைந்தார். அதன் பின்னர் மீண்டும் இலங்கை தொழிலாளர் காங்கிரசில் இணைந்து அதன் பிரதித் தலைவரானார். பின்னர் அக்கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் நாடாளு மன்றம் சென்றார். அவரது வாழ்வின் முற்பகுதி வாழ்வின் பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. வெளியிட்ட ஆண்டு தெரியாத போதிலும், இதில் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1977க்கு முன்னர் இப்பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மாத்தளை மாவட்டம் எல்கடுவ உன்னஸ்கிரிய தோட்டத்தில் பிறந்தவர் கவிஞர் சி.அழகுப்பிள்ளை. இவரது தந்தையார் தோட்டப் பாடசாலை ஆசிரியராகப் பணி புரிந்தவர். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 10276).

ஏனைய பதிவுகள்

Finest Maestro Casinos 2024

Posts Greatest Alive Mobile Gambling enterprises Better The newest Cellular Casinos To possess Android os What’s the Most trusted Internet casino? Can also be Uk

12848 – யோகிஸ்ரீ சுத்தானந்த பாரதியாரின் பாரத சக்தி மகா காவியத்தில் ஒரு ஆய்வுக் கண்ணோட்டம்.

ஈழத்துப் பூராடனார். கனடா: சீவன் பதிப்பகம், இல. 3, 1292 Sherwood Mills Blvd, Mississauga L5V1S6, Ontario, 1வது பதிப்பு, 2007. (கனடா: ரீ கொப்பி). xxiv, 2081+4 பக்கம், விலை: கனேடிய