12918 – ‘தமிழ் மகள்’ மங்களம்மாள் மாசிலாமணி.

வள்ளிநாயகி இராமலிங்கம் (மூலம்), க.குமரன் (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).

44 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 150., அளவு: 21.5 x 14.5 சமீ., ISBN: 978- 955-659-559-8.

இந்நூல் திருமதி வள்ளிநாயகி இராமலிங்கம் அவர்களின் ‘யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி: ஓர் ஆய்வு’ என்னும் நூலில் இடம்பெற்ற ‘காந்தியவழி சமூகசேவையாளர் தமிழ்மகள் மங்களம்மாள் மாசிலாமணி’ என்னும் கட்டுரையினை அடிப்படையாகக்கொண்டு தொகுக்கப்பட்டது. மேற்படி கட்டுரை செவ்விதாக்கப் பெற்றதுடன் மங்களம்மாள் தொடர்பான புதிய பல விடயங்கள் இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த மங்களம்மாள் மாசிலாமணி (1884-1971) காந்திய வழியில் தன்னை சமூக சேவையில் இணைத்துக்கொண்டவர். ‘தமிழ் மகள்’ என்ற சஞ்சிகையை நடத்திவந்தவர். இந்நூல் சமூகப் பின்னணி, மங்களம்மாளின் தோற்றமும் பண்பும், இயக்கங்களின் தலைவராக, பேச்சாளராக இந்தியாவிலும் இலங்கையிலும், அரசியலில் வீராங்கனையாக, சமூக சேவையாளராக, பத்திரிகை யாளராக, கணவனின் பங்கு, பல்கலைக்கழகம் சம்பந்தமாக, முடிவுரை ஆகிய 10 அத்தியாயங்களில் விரிவான தகவல்களுடன் எழுதப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

14414 தமிழ் எழுத்துக்கள்.

நூலாசிரியர் குழு. கொழும்பு: அரசகரும மொழிகள் திணைக்களம், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு, பாஷா மந்திரய, 341/7, கோட்டே வீதி, ராஜகிரிய, 2வது பதிப்பு, 2016, 1வது பதிப்பு, 2015.

12387 – சிந்தனை: மலர் 1 இதழ் 3 (ஒக்டோபர் 1967).

கா.இந்திரபாலா (பதிப்பாசிரியர்). பேராதனை: சிந்தனை வெளியீடுகள், பேராதனைக் கலைக் கல்விக் கழகம், 1வது பதிப்பு, ஒக்டோபர் 1967. (கண்டி: செய்தி அச்சகம், 241, கொழும்பு வீதி). (4), 65 பக்கம், அட்டவணைகள், விலை: ரூபா